குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2, 2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது.
இந்த நிலையில், குரூப்-4 தேர்வில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சு, நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வு நடைபெறும். கடந்தாண்டு குரூப்-4 தேர்வு ஜுன் 9-ம் தேதி நடைபெற்றது. இதில், 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 பேர் தேர்வு எழுதினர்.
அப்போது, காலிபணியிடங்கள் 6,244 ஆக இருந்தது. கடந்தாண்டே குரூப்- 4 காலிப் பணியிடங்கள் தொடர்ந்து உயர்த்தப்பட்டது. 9,491 காலிப் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்போது காலிப் பணியிடங்கள் மீண்டும் உயர்தப்பட்டுள்ளது. கூடுதலாக 41 காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டு 9,532 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.