தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுக்கா அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார். மொத்தம் 7,301 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்வு எழுத நாளை முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
குரூப் 4 : பதவி வாரியாக காலி பணியிடங்கள்
- கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) – 274
- இளநிலை உதவியாளர் – 3,681
- பில் கலெக்டர் – 50
- தட்டச்சர் – 2,108
- சுருக்கெழுத்து தட்டச்சர் – 1,024
- ஸ்டோர் கீப்பர் – 1
இதுதவிர வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சருக்கு 163 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil