கடந்த செப்டம்பர் 1ம் தேதி தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் குரூப் 4 தேர்வை நடத்தியிருந்தது. கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ நோட்டிபிகேஷன் 6,491 பணிகளுக்காக தேர்வு நடத்தப்படுகிறது என்றும் அறிவித்திருந்தது. தற்போது, இந்த காலியிடங்களின் எண்ணிகையை 9,398 ஆக அதிகரித்துள்ளது டிஎன்பிஎஸ்சி. இதனால், கூடுதலாக 3 ஆயிரம் தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
Advertisment
தேர்வு நடந்து 10 நாட்களுக்குப் பிறகு டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 விடைத்தாள்களை வெளியிட்டது ஆணையம். விடைகளுக்கு ஆட்சேபனை தெரிவிக்க செப்டம்பர் 17 வரை விண்ணப்பதாரர்களுக்கு கால அவகாசமும் வழங்கப்பட்டது.
டி.என்.பி.எஸ்.சி விதிகளின்படி, எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்க்கும் நடைமுறைக்கு அழைக்கப்படுவார்கள். எனவே உங்கள் மதிப்பெண் பட்டியலை நீங்கள் முதலில் பார்ப்பது அவசியமாகிறது. தேவைப்படும் ஆவனங்களையும் பத்திரபடுத்தி கொள்ளுங்கள்
உங்கள் மதிப்பெண் பட்டியலைத் தெரிந்து கொள்ள, இந்த இணைய முகவரிக்கு செல்லுங்கள். பின்பு, அதில் கேட்கப்படும் பதிவு எண்ணை நிரப்பிவிட்டால் போதும். உங்கள் மதிப்பெண்ணும், உங்கள் ரேங்க் பட்டியலையும் உங்கள் முன் காட்சிக்கு வந்துவிடும்.
முன்னதாக, டிஎன்பிஎஸ்சி குரூப் 2/2ஏ தேர்வில் சில மாற்றங்களை கொண்டுவந்திருந்தது. இந்நிலையில், முதன்மைத் தேர்வின் முதல் தாள் தொடர்பாக தேர்வர்கள் மாற்றுக் கருத்து கூற விரும்பினால் தெரிவிக்கலாம் என்று தெரிவித்து இருந்த்து.