Advertisment

TNPSC Group 4 Cut Off; குரூப் 4 தேர்வு கட் ஆஃப் எப்படி இருக்கும்? லேட்டஸ்ட் அப்டேட்

TNPSC Group 4 Exam: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4, வி.ஏ.ஓ தேர்வு; இந்த ஆண்டு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் என்ன? சமீபத்திய நிலவரம் இங்கே

author-image
WebDesk
New Update
Tamil Nadu Public Service Commission (TNPSC) Group 4 ,Recruitment , Notification , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம். 

Advertisment

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூன் 6 ஆம் தேதி நடத்தியது. மொத்தம் 6244 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர்.

இந்தநிலையில், ஜூன் 19 ஆம் தேதி குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 
குரூப் 4 தேர்வை பொறுத்தவரை தமிழ் பகுதியில் 100 கேள்விகளும், பொது அறிவு மற்றும் திறனறி பகுதியில் 100 கேள்விகளும் என 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இந்த ஆண்டு தமிழ் பகுதி சற்று எளிதாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரம் பொது அறிவு பகுதி சற்று கடினமாக இருந்ததாக கருதுகின்றனர். 

இந்தநிலையில், கூட்டுறவுத் துறை உதவி இயக்குனர், உளவியல் பேராசிரியர், வனப் பயிற்சியாளர உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான கட் ஆஃப் விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும், குரூப் 4 தேர்வுக்கான முடிவுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வின் கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம். இங்கு கட் ஆஃப் எனக் குறிப்பிடப்படுவது 300 மதிப்பெண்களுக்கு அல்லாமல், 200 கேள்விகளுக்கு எத்தனை சரியான கேள்விகள் என்பதே ஆகும்.

அந்தவகையில், பொதுப் பிரிவினருக்கு 165 – 168, பி.சி பிரிவினருக்கு 164 – 167, எம்.பி.சி பிரிவினருக்கு 164 – 167 ஆக இருக்க வாய்ப்புள்ளது. பி.சி முஸ்லீம் பிரிவினருக்கு 157 – 160, எஸ்.சி பிரிவினருக்கு 161 – 164, எஸ்.சி.ஏ பிரிவினருக்கு 159 – 162, எஸ்.டி பிரிவினருக்கு 156 – 160 என்ற அளவில் எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு இதிலிருந்து ஒரு மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது. மேலும் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், கட் ஆஃப் இன்னும் குறைய வாய்ப்புள்ளது.

இருப்பினும் சில நிபுணர்கள் இதைவிட கட் ஆஃப் குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறுகின்றனர். சிலர் கடந்த ஆண்டை ஒட்டியே கட் ஆஃப் இருக்கும் என்று கூறுகின்றனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tnpsc Group4
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment