டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், டைப்பிஸ்ட் மற்றும் ஸ்டெனோ டைப்பிஸ்ட் பதவிகளுக்கு எந்த ரேங்கிற்குள் இருந்தால் வேலை கிடைக்கும்? என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூன் 6 ஆம் தேதி நடத்தியது. மொத்தம் 6244 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர். இதனிடையே குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் தற்போது 9491 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சென்னை ஐ.ஏ.எஸ் அகாடமி யூடியூப் சேனலில் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு எந்த ரேங்கிற்குள் இருந்தால் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது என்பது விளக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தட்டச்சர் பதவிகளில் பி.சி பிரிவில் 644 காலியிடங்கள் உள்ளன. பி.சி.எம் பிரிவில் 85 காலியிடங்கள் உள்ளன. எம்.பி.சி பிரிவில் 486 காலியிடங்கள் உள்ளன. எஸ்.சி பிரிவில் 364 காலியிடங்கள் உள்ளன. எஸ்.சி.ஏ பிரிவில் 73 காலியிடங்கள் உள்ளன. எஸ்.டி பிரிவில் 24 காலியிடங்கள் உள்ளன.
தட்டச்சர் பதவிகளில் பி.சி பிரிவினர் 900 ரேங்கிற்குள் இருக்க வேண்டும். பி.சி.எம் பிரிவினர் 110 ரேங்கிற்குள் இருக்க வேண்டும். எம்.பி.சி பிரிவினர் 650 ரேங்கிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி பிரிவினர் 500 ரேங்கிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி.ஏ பிரிவினர் 110 ரேங்கிற்குள் இருக்க வேண்டும். எஸ்.டி பிரிவினர் 35 ரேங்கிற்குள் இருக்க வேண்டும்.
சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் பி.சி பிரிவில் 180 காலியிடங்கள் உள்ளன. பி.சி.எம் பிரிவில் 25 காலியிடங்கள் உள்ளன. எம்.பி.சி பிரிவில் 136 காலியிடங்கள் உள்ளன. எஸ்.சி பிரிவில் 103 காலியிடங்கள் உள்ளன. எஸ்.டி பிரிவில் 7 காலியிடங்கள் உள்ளன.
சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் பி.சி பிரிவினர் 300 ரேங்கிற்குள் இருக்க வேண்டும். பி.சி.எம் பிரிவினர் 35 ரேங்கிற்குள் இருக்க வேண்டும். எம்.பி.சி பிரிவினர் 220 ரேங்கிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி பிரிவினர் 180 ரேங்கிற்குள் இருக்க வேண்டும். எஸ்.டி பிரிவினர் 12 ரேங்கிற்குள் இருக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.