TNPSC Group 4; குரூப் 4 தேர்வு; எந்த ரேங்கிற்குள் இருந்தால் வேலை கிடைக்கும்?
TNPSC Group 4 Exam: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4, வி.ஏ.ஓ தேர்வு முடிவுகள் வெளியீடு; பிரிவு வாரியாக எந்த ரேங்க் வரை எடுத்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு என்பது இங்கே
TNPSC Group 4 Exam: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4, வி.ஏ.ஓ தேர்வு முடிவுகள் வெளியீடு; பிரிவு வாரியாக எந்த ரேங்க் வரை எடுத்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு என்பது இங்கே
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், எந்த ரேங்கிற்குள் இருந்தால் வேலை கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூன் 6 ஆம் தேதி நடத்தியது. மொத்தம் 6244 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர். இதனிடையே குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் தற்போது 9491 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வில் தற்போது வி.ஏ.ஓ மற்றும் இளநிலை உதவியாளர் பதவிகளில் 4682 காலியிடங்களும், தட்டச்சர் பதவிகளில் 2477 காலியிடங்களும், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் 662 காலியிடங்களும், வனத்துறை பதவிகளில் 1670 காலியிடங்களும் உள்ளன.
இந்தநிலையில், இன்று குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனையடுத்து இணைந்த கைகள் ஐ.ஏ.எஸ் அகாடமி யூடியூப் சேனலில் எந்த ரேங்கிற்குள் இருந்தால் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது என்பது விளக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
அதன்படி, வி.ஏ.ஓ மற்றும் இளநிலை உதவியாளர் பதவிகளில் பொதுப்பிரிவுக்கு 1451 ரேங்கிற்குள் இருந்தால் வேலை கிடைக்கும். பி.சி பிரிவினர் 1500 ரேங்கிற்குள் இருக்க வேண்டும். எம்.பி.சி பிரிவினர் 1250 ரேங்கிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி பிரிவினர் 1000 ரேங்கிற்குள் இருக்க வேண்டும். இங்கு ரேங்க் எனக் குறிப்பிடப்படுவது சாதிவாரியான ரேங்க் ஆகும்.
தட்டச்சர் பதவிகளில் பொதுப்பிரிவுக்கு 1000 ரேங்கிற்குள் இருந்தால் வேலை கிடைக்கும். பி.சி பிரிவினர் 900 ரேங்கிற்குள் இருக்க வேண்டும். எம்.பி.சி பிரிவினர் 700 ரேங்கிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி பிரிவினர் 600 ரேங்கிற்குள் இருக்க வேண்டும்.
சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளில் பொதுப்பிரிவுக்கு 350 ரேங்கிற்குள் இருந்தால் வேலை கிடைக்கும். பி.சி பிரிவினர் 250 ரேங்கிற்குள் இருக்க வேண்டும். எம்.பி.சி பிரிவினர் 200 ரேங்கிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி பிரிவினர் 160 ரேங்கிற்குள் இருக்க வேண்டும்.
வனத்துறை பதவிகளில் பொதுப்பிரிவுக்கு 700 ரேங்கிற்குள் இருந்தால் வேலை கிடைக்கும். பி.சி பிரிவினர் 650 ரேங்கிற்குள் இருக்க வேண்டும். எம்.பி.சி பிரிவினர் 500 ரேங்கிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி பிரிவினர் 400 ரேங்கிற்குள் இருக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“