டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற தேதி, விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூன் 9 ஆம் தேதி நடத்தியது. மொத்தம் 6244 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர்.
இந்தநிலையில், ஜூன் 19 ஆம் தேதி குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மேலும், குரூப் 4 தேர்வுக்கான முடிவுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் எந்தத் தேதியில் வெளியாகும் என்ற இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக அடுத்த வாரத்திற்குள் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“