TNPSC Group 4; டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது? முக்கிய அப்டேட்

TNPSC Group 4 Exam: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4, வி.ஏ.ஓ தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்; வெளியான முக்கிய அப்டேட்

TNPSC Group 4 Exam: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4, வி.ஏ.ஓ தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்; வெளியான முக்கிய அப்டேட்

author-image
WebDesk
New Update
TNPSC Group 2  Group 2A vaccancies increased to 213 Tamil News

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடுவது தொடர்பாக அக்டோபர் 28 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisment

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூன் 9 ஆம் தேதி நடத்தியது. மொத்தம் 6244 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர்.

இந்தநிலையில், ஜூன் 19 ஆம் தேதி குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குரூப் 4 தேர்வு முடிவுகள் வருகின்ற அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்று தேர்வாணையம் அறிவித்தது. 

இதற்கிடையில், குரூப் 4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதன்மூலம் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 6724 ஆக உயர்ந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை போதுமானது அல்ல என தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை விடுத்து வந்தனர். 

Advertisment
Advertisements

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் மீண்டும் அதிகரிக்கப்பட்டன. புதிதாக 2208 காலியிடங்கள் சேர்க்கப்பட்டு, தற்போது குரூப் 4 தேர்வுக்கு மொத்தமாக 8932 காலியிடங்கள் உள்ளன. 

இந்த நிலையில் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடுவது குறித்த உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற 28 ஆம் தேதி நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனையடுத்து ஒரு சில தினங்களில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனிடையே திட்டமிட்டப்படி குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tnpsc Group4

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: