டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூலை 12 ஆம் தேதி நடத்தியது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெற்றிருந்தன.
இந்த குரூப் 4 தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்களும் நிபுணர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.
Advertisment
Advertisements
இந்த நிலையில், குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பது குறித்து போட்டித் தேர்வு நிபுணர் சஞ்சு தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார். வீடியோவின் படி, தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேர்வின் கடினத்தன்மை அடிப்படையில் கட் ஆஃப் கணிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ விடைகுறிப்பு வரும் போது இந்த நிலவரம் மாற வாய்ப்புள்ளது. இங்கு கட் ஆஃப் மதிப்பெண் எனக் குறிப்பிடுவது கேள்விகளின் எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
குரூப் 4 தேர்வு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்
எஸ்.டி – 138
எஸ்.சி.ஏ - 144
எஸ்.சி – 149
பி.சி.எம் – 146
பி.சி/ எம்.பி.சி - 158
பெண் தேர்வர்களாக இருந்தால் இதில் இரண்டு கேள்விகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளலாம். தட்டச்சர் பதவிகளுக்கு 5-6 கேள்விகள் குறைவாக வரலாம். சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு 10 கேள்விகள் வரை குறைவாக வரலாம்.