/indian-express-tamil/media/media_files/2024/12/13/f5bSdpPd7uEcojRk7Xjo.jpg)
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூலை 12 ஆம் தேதி நடத்தியது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெற்றது. முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெற்றிருந்தன.
இந்த குரூப் 4 தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வர்களும் நிபுணர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பது குறித்து சண்முகம் ஐ.ஏ.எஸ் அகாடமி என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது. இங்கு கட் ஆஃப் மதிப்பெண் எனக் குறிப்பிடுவது கேள்விகளின் எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
குரூப் 4 தேர்வு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்
பொதுப் பிரிவு - 148
பி.சி - 146
எம்.பி.சி – 145
எஸ்.சி – 140
பி.சி.எம் – 136
எஸ்.சி.ஏ - 135
எஸ்.டி – 130
பெண் தேர்வர்களுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்
பொதுப் பிரிவு - 145
பி.சி - 143
எம்.பி.சி – 141
எஸ்.சி – 138
பி.சி.எம் – 133
எஸ்.சி.ஏ - 132
எஸ்.டி – 125
தமிழ் வழியில் படித்த தேர்வர்களுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்
பொதுப் பிரிவு - 138
பி.சி - 136
எம்.பி.சி – 134
எஸ்.சி – 131
பி.சி.எம் – 131
எஸ்.சி.ஏ - 131
எஸ்.டி – 124
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.