டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில், ஓ.எம்.ஆர் தாளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த குரூப் 4 தேர்வு நாளை ஜூலை 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெறும்.
இந்த நிலையில் தேர்வாணையம் விடைத்தாள் எனப்படும் ஓ.எம்.ஆர் தாளில் சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுகுறித்து சுரேஷ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் யூடியூப் சேனலில் விளக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
ஓ.எம்.ஆர் தாளில் செய்யும் தவறுகள் உங்கள் விடைத்தாளை செல்லாததாக்கும். எனவே கவனமாக செயல்பட வேண்டும். ஓ.எம்.ஆர் தாளின் முதல் பக்கத்தில் வரிசை எண் இடம்பெற்றிருக்கும். தொடர்ந்து தேர்வரின் பெயர், தேர்வெண், பாடம், தேர்வு மைய எண், தேர்வு மைய முகவரி உள்ளிட்ட தகவல்கள் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும். மேலும் தேர்வரின் புகைப்படமும் இடம்பெற்றிருக்கும். இவை எல்லாம் சரியாக இருக்கிறதா என சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் 9.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்படும். அதில் அனைத்து பக்கங்களும் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளதா என சரிபார்க்கவும். சரியாக இருந்தால், ஓ.எம்.ஆர் தாளில் வினாத்தாள் எண்ணை குறிப்பிட்டு, வட்டங்களை கருமையாக்க வேண்டும். ஓ.எம்.ஆர் தாளில் கருமை நிற பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அடுத்ததாக தேர்வு கூட கண்காணிப்பாளர் குறிக்க வேண்டிய தகவல்கள் இடம்பெற்றிருக்கும். கீழே தேர்வர் கையொப்பமிட வேண்டிய இடம் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் கையொப்பமிட வேண்டும். ஓ.எம்.ஆர் தாளின் பார் கோடில் எந்த கிறுக்கல்களும் இருக்க கூடாது. மேலும் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை தெளிவாக படித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக அனைத்து வினாக்களுக்கும் விடையளிங்கள். விடை தெரியவில்லை என்ற விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டாம். மைனஸ் மதிப்பெண் இல்லை என்பதால், தெரியாத கேள்விகளுக்கும் ஏதேனும் ஒரு பதிலை குறியுங்கள்.
அடுத்ததாக 200 கேள்விகளுக்கும் பதில் அளித்து இருக்க வேண்டும். இல்லை என்றால் விடையளிக்காத கேள்விகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படும்.
இறுதியாக ஓ.எம்.ஆர் தாளில் கண்காணிப்பாளர் கையொப்பமிட இடம் கொடுக்கப்பட்டு இருக்கும். கண்காணிப்பாளர் கருப்பு நிற பேனாவில் கையொப்பமிடுவதை உறுதி செய்துக் கொள்ளுங்கள்.
ஒரு கேள்விக்கு ஒரே ஒரு வட்டத்தை மட்டும் கருமையாக்குங்கள். வினாக்களுக்கு விடையளிக்க வேண்டிய பகுதிக்கு கீழே எத்தனை கேள்விகளுக்கு விடையளித்திருக்கிறீர்கள் என்ற தகவல்களை அளிக்க வேண்டியிருக்கும். அதனை சரியாக குறிப்பிடுங்கள்.
அதற்கு பக்கத்தில் கைரேகை வைக்க வேண்டும். கைரேகை வைக்கவில்லை என்றால் மைனஸ் மதிப்பெண் வழங்கப்படும்.