TNPSC Group 4: விரைவில் குரூப் 4 தேர்வு அறிவிப்பு; புதிதாக படிப்பவர்கள் இப்படி படித்தால் அரசு வேலை உறுதி!
TNPSC Group 4 Exam 2025: குரூப் 4 தேர்வுக்கு ஏற்கனவே படித்து வருபவர்களும், புதிதாக படிக்கத் தொடங்குபவர்களும் எப்படி படிக்க வேண்டும்; சூப்பர் டிப்ஸ் இங்கே
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், ஏற்கனவே படித்து வருபவர்களும், புதிதாக படிக்கத் தொடங்குபவர்களும் எப்படி படிக்க வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள இடங்களை தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது. இவற்றில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 ஆகிய தேர்வுகள் அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள் எழுதும் தேர்வுகளாக உள்ளன. இவற்றுக்கான போட்டியும் கடுமையாக உள்ளது.
இந்தநிலையில், குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. தேர்வாணைய அட்டவணையின்படி, ஏப்ரல் மாதம் வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதிக காலியிடங்களுடன், குறைந்தப்பட்ச கல்வித் தகுதி கொண்ட இந்தத் தேர்வுக்காக லட்சக்கணக்கான தேர்வர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்தநிலையில், ஏற்கனவே படித்து வருபவர்களும், புதிதாக படிக்கத் தொடங்குபவர்களும் எப்படி படிக்க வேண்டும் என்பது சென்னை ஐ.ஏ.எஸ் அகாடமி யூடியூப் வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
அதன்படி, முதல் முறையாக டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு படிப்பவர்கள், முதலில் பாடத்திட்டத்தை முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டும். இந்த ஆண்டு முதல், பாட வாரியாக கேட்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கையை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. எனவே பாடத்திட்டத்தை முழுமையாக தெரிந்துக் கொள்வது அவசியம்.
அடுத்ததாக முந்தைய ஆண்டு வினாத்தாள்களை பகுப்பாய்வு செய்யுங்கள். அடுத்ததாக பாடத்திட்டத்தில் உள்ள தலைப்புகளை எங்கு படிப்பது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து என்ன புத்தகங்கள் தேவை என்பதை தெரிந்து சேகரித்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக புதிதாக படிப்பவர்கள், தினமும் 3 வெவ்வேறு பாடங்களை படியுங்கள். அதிலும், திட்டமிட்டு ஒழுக்கமாக, கவனச்சிதறல் இல்லாமல் படியுங்கள். தொடர்ந்து மாதிரி தேர்வுகளை எழுதிப் பாருங்கள். இவ்வாறு படித்தால் குரூப் 4 தேர்வில் வெற்றி பெறலாம்.
ஏற்கனவே படித்து வருபவர்களைப் பொறுத்தவரை, உங்களுடைய பலம், பலவீனம், வாய்ப்புகள் மற்றும் கவனச் சிதறல்களைத் தெரிந்து படியுங்கள். அடுத்ததாக மாதிரித் தேர்வுகளை அதிகமாக பயிற்சி செய்யுங்கள். மேலும் படித்தவற்றை திரும்ப திரும்ப தொடர்ந்து படியுங்கள். பின்னர் சக மாணவர்களுடன் கலந்துரையாடுங்கள். திட்டமிட்டு, இலக்கு வைத்து படியுங்கள். இப்படி படித்தால் இந்த முறை அரசு வேலையை உறுதி செய்யலாம்.