டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், எவ்வளவு கட் ஆஃப் வரை வேலை கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூன் 6 ஆம் தேதி நடத்தியது. மொத்தம் 6244 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்தநிலையில், இன்று (ஜூன் 19) குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தற்காலிக விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்ய விரும்புபவர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தேர்வர்கள் ஜுன் 25 ஆம் தேதி வரை தங்கள் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம்.
இந்தநிலையில் இந்த ஆண்டுக்கு குரூப் 4 தேர்வு கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம். இங்கு கட் ஆஃப் எனக் குறிப்பிடப்படுவது 300 மதிப்பெண்களுக்கு அல்லாமல், 200 கேள்விகளுக்கு எத்தனை சரியான கேள்விகள் என்பதே. அறிவுசால் அகாடமி வெளியிட்டுள்ள வீடியோவின்படி,
வி.ஏ.ஓ மற்றும் இளநிலை உதவியாளர் பணிகளுக்கான எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப்
பொதுப் பிரிவு – 173
பி.சி – 172
எம்.பி.சி – 172
பி.சி.எம் – 165
எஸ்.சி – 169
எஸ்.சி.ஏ – 167
எஸ்.டி – 160
தட்டச்சர் பணிகளுக்கான எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்
பொதுப் பிரிவு – 170
பி.சி – 168
எம்.பி.சி – 168
பி.சி.எம் – 152
எஸ்.சி – 164
எஸ்.சி.ஏ – 160
எஸ்.டி – 153
தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு இதிலிருந்து ஒரு மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது. மேலும் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், கட் ஆஃப் இன்னும் குறைய வாய்ப்புள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“