Advertisment

TNPSC Group 4 Results: உங்களுக்கு போஸ்டிங் வாய்ப்பு எப்படி? இன்னும் 3 ப்ராசஸ் இருக்கு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு ரிசல்ட்; கவுன்சிலிங்கில் எந்த ரேங்க் வரை இருந்தால் வேலை கிடைக்கும்; முழு விளக்கம் இங்கே

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tnpsc

TNPSC

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த 24 ஆம் தேதி வெளியாகியுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக என்னென்ன செயல்முறைகள் உள்ளன என்பதை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், சில நாட்களுக்கு முன் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்தது. தற்போது, இந்த குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: TNPSC Group 4 Results Rank Analysis: எந்த ரேங்க் வரை ஜூனியர் அசிஸ்டன்ட் வேலை? உத்தேச பட்டியல்

இந்தநிலையில், அடுத்தக்கட்டமாக என்னென்ன செயல்முறைகள் உள்ளன என்பதை இப்போது பார்ப்போம். தற்போது குரூப் 4 ரிசல்ட் ஒவ்வொரு தேர்வரின் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தரவரிசையானது ஒட்டுமொத்த தரவரிசை மற்றும் சாதி அடிப்படையிலான தரவரிசை என இரண்டு பிரிவாக வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக ஒரு பணியிடத்திற்கு 2 அல்லது 3 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் (CV List) தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும். அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் தங்கள் சான்றிதழ்களை இ-சேவை மையங்கள் வழியாக இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

அதன்பிறகு, காலியிடங்களுக்கு ஏற்ப முதற்கட்ட கலந்தாய்வுக்கான பட்டியல் வெளியிடப்படும். பின்னர் காலியிடங்களுக்கு ஏற்ப அடுத்ததடுத்த கலந்தாய்வு நடத்தப்படும். இப்படியாக குரூப் 4 தேர்வில் வேலை வாங்குவதற்கு முன் 3 செயல்முறைகள் உள்ளன.

அடுத்தாக எந்த ரேங்கில் இருந்தால் வேலை கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

தற்போதைய பதவி வாரியான காலியிட விவரம்

கிராம நிர்வாக அலுவலர் – 425

இளநிலை உதவியாளர் – 5052

தட்டச்சர் – 3314

சுருக்கெழுத்து தட்டச்சர் – 1186

வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 140

எந்த ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்பு

பொதுப் பிரிவு (General)

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 1722

தட்டச்சர் – 1021

சுருக்கெழுத்து தட்டச்சர் – 346

பிற்படுத்தப்பட்டோர் (BC)

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 1487

தட்டச்சர் – 876

சுருக்கெழுத்து தட்டச்சர் – 269

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 1133

தட்டச்சர் – 670

சுருக்கெழுத்து தட்டச்சர் – 220

தாழ்த்தப்பட்டோர் (SC)

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 842

தட்டச்சர் – 504

சுருக்கெழுத்து தட்டச்சர் – 170

அருந்ததியர் (SCA)

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 179

தட்டச்சர் – 108

சுருக்கெழுத்து தட்டச்சர் – 36

பிற்படுத்தப்பட்டோர் – முஸ்லீம் (BCM)

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 193

தட்டச்சர் – 113

சுருக்கெழுத்து தட்டச்சர் – 110

பழங்குடியினர் (ST)

கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 61

தட்டச்சர் – 22

சுருக்கெழுத்து தட்டச்சர் – 35

மேலும், BC/ MBC/ SC பிரிவில் சாதி வாரியான ரேங்கில் மேலே கூறிய ரேங்கை விட கூடுதலாக 200 ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதேநேரம், BCM/ SCA/ ST பிரிவில் கூடுதலாக 50-60 ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc Group4 Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment