பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த 24 ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்த நிலையில் எந்த ரேங்க் வரை உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. இந்தநிலையில், சில நாட்களுக்கு முன் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்தது. இதனால் கட் ஆஃப் மதிப்பெண்கள் கணிசமாக குறையும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்: ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!
தற்போது, இந்த குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், எந்த ரேங்கில் இருந்தால் வேலை கிடைக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
தற்போதைய பதவி வாரியான காலியிட விவரம்
கிராம நிர்வாக அலுவலர் – 425
இளநிலை உதவியாளர் – 5052
தட்டச்சர் – 3314
சுருக்கெழுத்து தட்டச்சர் – 1186
வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 140
எந்த ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்பு
பொதுப் பிரிவு (General)
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 1722
தட்டச்சர் – 1021
சுருக்கெழுத்து தட்டச்சர் – 346
பிற்படுத்தப்பட்டோர் (BC)
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 1487
தட்டச்சர் – 876
சுருக்கெழுத்து தட்டச்சர் – 269
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC)
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 1133
தட்டச்சர் – 670
சுருக்கெழுத்து தட்டச்சர் – 220
தாழ்த்தப்பட்டோர் (SC)
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 842
தட்டச்சர் – 504
சுருக்கெழுத்து தட்டச்சர் – 170
அருந்ததியர் (SCA)
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 179
தட்டச்சர் – 108
சுருக்கெழுத்து தட்டச்சர் – 36
பிற்படுத்தப்பட்டோர் – முஸ்லீம் (BCM)
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 193
தட்டச்சர் – 113
சுருக்கெழுத்து தட்டச்சர் – 110
பழங்குடியினர் (ST)
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், பண்டக காப்பாளர் – 61
தட்டச்சர் – 22
சுருக்கெழுத்து தட்டச்சர் – 35
மேலும், BC/ MBC/ SC பிரிவில் சாதி வாரியான ரேங்கில் மேலே கூறிய ரேங்கை விட கூடுதலாக 200 ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதேநேரம், BCM/ SCA/ ST பிரிவில் கூடுதலாக 50-60 ரேங்க் வரை வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.