Advertisment

TNPSC Group 4 Exam; டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; டவுன்லோட் செய்வது எப்படி?

TNPSC Group 4 Exam: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4, வி.ஏ.ஓ தேர்வு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு; டவுன்லோட் செய்வது எப்படி என்பது இங்கே

author-image
WebDesk
New Update
TNPSC

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4, வி.ஏ.ஓ தேர்வு ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ஜூன் 9 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை இப்போது பார்ப்போம். 

Advertisment

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 6244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்தக் குரூப் 4 தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெறும். 

இந்தநிலையில், குரூப் 4 தேர்வு 09.06.2024 அன்று நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இந்தநிலையில், இன்று (மே 27) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. எனவே அதனை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.

குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்வது எப்படி?

முதலில் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கமான www.tnpsc.gov.in என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.

அதில் ஏற்கனவே பதிவு செய்தோர் என்ற பொத்தானை அழுத்தவும்.

பின்னர் உங்கள் நிரந்தரப் பதிவு மற்றும் கடவுச்சொல் கொண்டு உள்நுழையவும்.

இப்போது திரையில் உங்கள் சுயவிவர பக்கத்தில், ஹால் டிக்கெட் என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும். 

இப்போது திரையில் தோன்றும் TNPSC ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு (CCSE-IV) 2024 என்பதற்கு நேராக டவுன்லோட் ஹால் டிக்கெட் என்று இருக்கும் இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது திரையில் தோன்றும் புதிய பக்கத்தில் உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதிக் கொண்டு உள்நுழைய வேண்டும்.

இப்போது திரையில் குரூப் 4 தேர்வு ஹால் டிக்கெட் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tnpsc Group4
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment