TNPSC group 4 VAO exam important topics for aspirants: குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கு இன்னும் கிட்டதட்ட மூன்று வாரங்களே உள்ளன. இந்த நேரத்தில் படிக்க வேண்டிய மிக முக்கியமான பாடங்கள் குறித்து இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வை ஜூலை 24 ஆம் தேதி நடத்தவுள்ளது. இந்தத் தேர்வுக்காக தமிழகத்தில் பலரும் கடந்த 2 ஆண்டுகளாக கடினமாக படித்து வருகின்றனர். குரூப் 4 தேர்வு ஒரே ஒரு எழுத்துத் தேர்வை அடிப்படையாகக் கொண்டது. இந்த தேர்வில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும். முதல் பகுதி தமிழ் பாடத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். அடுத்தப் பகுதியாக பொது அறிவு மற்றும் கணிதப் பகுதியில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.
இதனிடையே, குரூப் 4 தேர்வில் பெரும்பாலான வினாக்கள் 6 முதல் 10 வரை உள்ள பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து தான் கேட்கப்படுகின்றன என்பதால், இந்த தேர்வுக்கு தயாராகி அனைவரும் அந்தப் புத்தகங்களை நன்றாகப் படித்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: தமிழக போலீஸ் துறைக்கு 2-ம் நிலை காவலர் தேர்வு: ரெடி ஆகுங்க மக்களே!
எனவே நாம் இப்போது எந்த பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
தமிழ் மற்றும் கணித பகுதிகளை நாம் முழுமையாக படித்திருக்க வேண்டும். ஏனென்றால் அவை தான் நமக்கு அதிக மதிப்பெண்கள் எடுக்க வழிவகுப்பவை. இவை தவிர கீழ்கண்ட தலைப்புகளையும் படித்துக்கொள்ள வேண்டும்.
வரலாறு - 19 ஆம் நூற்றாண்டில் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள், ஆங்கிலேயர்களுக்கு எதிராக தமிழகத்தில் நடந்த புரட்சிகள், தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம், காந்திய காலகட்டம், தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள், காலனியத்திற்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும், சிந்து நாகரிகம், குப்தர்கள், அரேபியர், துருக்கியர்களின் வருகை, முகலாயர்கள், மராத்தியர்கள், விஜயநகர, பாமினி அரசுகள், தென்னிந்திய வரலாறு, ஐரோப்பியர்களின் வருகை, தமிழ் சமூகம், தமிழ்நாடு கலை மற்றும் கட்டிடக்கலை,
குடிமையியல் -இந்திய அரசியலமைப்பு, மாநில அரசு, மத்திய அரசு, அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி, தேர்தல் அரசியல் கட்சிகள், மனித உரிமைகள், அரசாங்களின் வகைகள், உள்ளாட்சி அமைப்புகள், தேசிய சின்னங்கள், பெண்கள் மேம்பாடு, நீதித்துறை, லோக்பால், லோக் ஆயுக்தா,
புவியியல்- இந்தியா அமைவிடம் நிலத்தோற்றம், இந்தியா காலநிலை மற்றும் இயற்கை தாவரங்கள், வேளாண்மை கூறுகள், வளங்கள் மற்றும் தொழிலங்கள், மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு, தமிழ்நாட்டு இயற்கை பிரிவுகள், மானுடவியல், நிலக்கோளம், வளிமண்டலம், சுற்றுச்சூழல்
பொருளாதாரம் - இந்திய பொருளாதாரம், பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும், ஊரகப் பொருளாதாரம், தமிழ்நாடு பொருளாதாரம், மொத்த உள்நாட்டு உற்பத்தி, உலகமயமாதல், உணவு பாதுகாப்பு, அரசாங்கமும் வரிகளும்,
தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம் – சமூக நீதி, சமூக நல்லிணக்கம், சமூக மேம்பாடு, தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு முறைமைகள், தமிழ்நாடு புவியியல் மற்றும் பொருளாதாரம் மற்றும் அவற்றின் தாக்கங்கள்,
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil