Advertisment

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4: மொத்த பணியிடங்கள் 6244; எந்த பதவிக்கு எத்தனை இடங்கள்?

TNPSC Group 4 Exam: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு; மொத்த பணியிடங்கள் 6244; பதவிகள் முழு விவரம் இங்கே

author-image
WebDesk
New Update
TNPSC

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், என்னென்ன பதவிகள் உள்ளன? எத்தனை காலியிடங்கள் உள்ளன? என்பன உள்ளிட்ட தகவல்களை விரிவாக பார்ப்போம்.

Advertisment

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை அறிவித்துள்ளது. மொத்தம் 6244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

கிராம நிர்வாக அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 108

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,500 – 71,900

இளநிலை உதவியாளர் (அமைச்சு பணி)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2486

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,500 – 71,900

இளநிலை உதவியாளர் (பிற பணிகள்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 118

(தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் – 10, வக்பு வாரியம் – 27, குடிநீர் வடிகால் வாரியம் – 49, சிறு தொழில் கழகம் – 15, பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் – 7, மூலிகை மருந்து கழகம் - 10)

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகப் பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.

சம்பளம்: ரூ. 19,500 – 62,000

தட்டச்சர் (அமைச்சு பணி)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1653

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,500 – 71,900

தட்டச்சர் (பிற பணிகள்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 52

(தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் – 3, சிறு தொழில் கழகம் – 3, வாணிப கழகம் – 39, பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் – 7)

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,500 – 62,000 (வாணிப கழகம் ரூ. 19,500 – 71,900)

சுருக்கெழுத்து தட்டச்சர் (அமைச்சு பணி)

காலியிடங்களின் எண்ணிக்கை: 441

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 20,600 – 75,900

சுருக்கெழுத்து தட்டச்சர் (பிற பணிகள்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

(தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் – 2, பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் – 2)

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகப் பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 20,600 – 65,500 

நேர்முக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1
(தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்)

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 20,600 – 65,500 

நேர்முக எழுத்தர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2
(தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்)

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,500 – 62,000 

தனிச் செயலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 4
(தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம்)

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 20,600 – 65,500 

இளநிலை செயல் பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 34
(தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம்)

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,500 – 62,000

இளநிலை செயல் பணியாளர் (தட்டச்சு)

காலியிடங்களின் எண்ணிக்கை: 7
(தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம்)

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,500 – 62,000

வரவேற்பாளர் மற்றும் தொலைபேசி இயக்குபவர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1
(தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்)

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொலைபேசி இயக்குவதில் சான்றிதழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,500 – 62,000 

பால் அளவையாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 15
(தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம்)

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,200 – 57,900

ஆய்வக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 25
(தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலைப் பணி)

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: ரூ. 19,500 – 71,900

வரித்தண்டலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 66

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 19,500 – 71,900

முதுநிலை தொழிற்சாலை உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 49

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது 10 ஆம் வகுப்புடன் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,900 – 50,400

வனக் காப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 171

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,200 – 57,900

ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 192

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,200 – 57,900

வனக் காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 526

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 16,600 – 52,400

வனக் காவலர் (பழங்குடியின இளைஞர்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 288

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 16,600 – 52,400

கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 20,600 – 75,900

தேர்வு முறை: தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இரண்டாம் பகுதியில் பொது அறிவில் 75 கேள்விகளும், திறனறி பகுதியில் 25 கேள்விகளும் இடம்பெறும். தேர்வு நடைபெறும் நாள்: 09.06.2024

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment