ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு; புதிய முறையில் TNPSC Group 4 ரிசல்ட்: லேட்டஸ்ட் அப்டேட்

TNPSC Group 4: குரூப் 4, வி.ஏ.ஓ தேர்வு ரிசல்ட் எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

author-image
WebDesk
New Update
TNPSC Group-4 exam results will be released in March

குரூப் 4 தேர்வு 2022ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது.

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் குறித்த முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம்.

Advertisment

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும்.

இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்னும் 10 நாட்களுக்குள் ரிசல்ட் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: UPSC Exam: நீங்க தவற விடக்கூடாத சில டாபிக்ஸ் இங்கே!

Advertisment
Advertisements

முன்னதாக குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பெண்களுக்கான இடஒதுக்கீட்டு வழக்கின் நீதிமன்ற தீர்ப்பால், தேர்வாணையத்தின் தேர்வு முடிவுகள் வெளியாகுவதில் தாமதம் ஏற்பட்டது. நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப முடிவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு, குரூப் 2 தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல், குரூப் 4 தேர்வு முடிவுகளும் நீதிமன்ற தீர்ப்புக்கு ஏற்ப புதிய முறையைப் பின்பற்றி வெளியிடப்பட உள்ளது. குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்றும் தேர்வாணையம் அறிவித்துள்ளதால், இன்னும் 10 நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் தேர்வு முடிவுகள் வெளியாகலாம். எனவே தேர்வர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தை தொடர்ந்து பார்வையிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: