scorecardresearch

TNPSC குரூப் 4 காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு; காலியிடங்களின் எண்ணிக்கை 10,117 ஆக அதிகரிப்பு

TNPSC Group-4 exam results will be released in March
குரூப் 4 தேர்வு 2022ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது.

இதையும் படியுங்கள்: சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; ரூ60,000 சம்பளம்; உடனே விண்ணப்பிங்க!

இந்தநிலையில், சமீபத்தில் அரசு துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாலும், பணி ஓய்வு காரணமாக ஏராளமானோர் ஓய்வு பெற்றுள்ளதாலும், காலியிடங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக குரூப் 4 நிலைகளில் அதிக காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே குரூப் 4 தேர்வுகளில் அறிவிக்கப்பட்ட காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என தேர்வர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்தநிலையில், குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்கள் 10,117 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, திருத்தப்பட்ட அறிவிக்கையை அதிகரிப்பு (Group 4 notification ADDENDUM) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட அறிவிப்பின் படி, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 274-ல் இருந்து 425 ஆகவும், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 3593-ல் இருந்து 4,952 ஆகவும், தட்டச்சர் காலியிடங்கள் எண்ணிக்கை 2,108-ல் இருந்து 3311 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

திருத்தியமைக்கப்பட்ட காலியிடங்களின் விவரம்

பதவியின் பெயர்முந்தைய காலியிடங்கள்திருத்தியமைக்கப்பட்ட காலியிடங்கள்
கிராம நிர்வாக அலுவலர்  274425
இளநிலை உதவியாளர் (பிணையமற்றது)  3593                4952
இளநிலை உதவியாளர் (பிணையம்)88
வரித் தண்டலர்50
தட்டச்சர்21083311
சுருக்கெழுத்து தட்டச்சர்10241176
பண்டக காப்பாளர்11

இதுதவிர, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வீட்டு வசதி வாரியம், சிறுபான்மையினர் நல வாரியம், பிற்படுத்தப்பட்டோர் நல வாரியம் போன்ற பல்வேறு துறைகளில் கீழ் அறிவிக்கப்பட்ட 163 காலியிடங்கள் எண்ணிக்கை 252 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் தொடர்பான முழுவிவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/Document/English/ADDENDUM_%207B_2022.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

மேலும் பதவி வாரியாக, பிரிவு வாரியான (Vacancy Distribution) காலியிட விவரங்களும் தேர்வாணைய இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால், கடந்த குரூப் 4 கட் ஆஃப் மதிப்பெண்களை விட இந்த ஆண்டு குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tnpsc group 4 vao exam vacancies increased