Tamilnadu Public Service Commission: டி.என்.பி.எஸ்.சி தேர்வில் தவறான கேள்விகள் இடம் பெற்றது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. தவறான கேள்விகளை டி.என்.பி.எஸ்.சி கவனத்திற்கு கொண்டு வர வாய்ப்புகள் வழங்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் கூறப்படுவதால், கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்குமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பல கேள்விகள் முரண்பாடாகவும், வேடிக்கையாகவும் இருந்தது என்பதை நீங்கள் கடந்து வந்திருப்பீர்கள். ஆனால், அச்சுப் பிழையால் சில கேள்விகள் தவறாகியுள்ளன. என்னென்ன கேள்விகள் என்பதை கீழே பார்க்கலாம்.
- இந்திய அரசியலமைப்பின் எந்த விதி அடிப்படைக் கடமைகள் குறித்து விளக்குகிறது? எனக் கேட்டு அதற்கு சாய்ஸ்களாக
இதே கேள்வி, ஆங்கிலத்தில் Which article of the Indian Constitution deals with fundamental rights? என்று அச்சிடப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பில் பகுதி மூன்றில் உள்ள அடிப்படை உரிமைகள்(fundamental rights ) 12-35 வரை சொல்லப்பட்டிருகிறது . அடிப்படைக் கடமைகள் 51A வில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆங்கில ஆச்சில் fundamental duties க்கு பதிலாக fundamental rights ஆச்சிடப்பட்டுள்ளது. பொதுவாக ஆங்கிலம் - தமிழ் வினாக்களில் முரண்பாடு இருந்தால், ஆங்கில கேள்வியைத் தான் முடிவை எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், தற்போது தமிழில் கேள்வி சரியாகவும், ஆங்கிலத்தில் தவறுதலாகவும் உள்ளதால் டிஎன்பிஎஸ்சி என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதை நாம் பொருந்திருந்து தான் பார்க்க வேண்டும்.
2. தவறான குடியரசு :
இதே கேள்வி தமிழில் இவ்வாறாக இருந்தது:
அதாவது, ஆங்கில கேள்வியில் பொருத்துக நான்கில் Dissolution of the 1st loksabha என்றும், தமிழில் குடியரசு தினம் என்று தவறாக அச்சிடப்பட்டுள்ளது.தமிழ் கேள்வியில் குடியரசு தினத்திற்கு எந்த பொறுத்தத்தையும் நம்மால் தேட முடியாது .
இந்த விவகாரம் குறித்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நந்தகுமார் கூறுகையில், ‘தவறான கேள்விகள் குறித்து தேர்வர்கள் தங்களுடைய கருத்துகளை டி.என்.பி.எஸ்.சி. கவனத்திற்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பு ஓரிரு நாளில் வழங்கப்படும். அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்" என தெரிவித்துள்ளார்.
தவறான கேள்விகளை டி.என்.பி.எஸ்.சி கவனத்திற்கு கொண்டு வர வாய்ப்புகள் வழங்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் கூறப்படுவதால், கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்குமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.