தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2020ம் ஆண்டிற்கான உத்தேச தேர்வு அட்டவணையை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி குரூப் I தேர்வுக்கான அறிவிப்பை கடந்த ஒன்றாம் தேதி வெளியிட்டிருந்தது.
டிஎன்பிஎஸ்சி 2020 காலண்டரில் சொல்லப்பட்டிருப்பது போல், குரூப் I தேர்வு அறவிப்பு வெளியானது அனைவரையும் ஆச்சரியமளிக்க வைத்தது .
2020ம் ஆண்டிற்கான குரூப் I முதல்நிலை தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 5ம் தேதி நடத்தப்படும் என்றும், இதற்கான விண்ணப்பம் ஜனவரி 20ம் தேதியில் தொடங்கி, அடுத்த மாதம் 19ம் தேதி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு Current Affairs பாடங்களை தயார் செய்வது எப்படி?
குரூப் I - தேர்வுமுறை:
முதல்நிலை தேர்வு
முதன்மை தேர்வு:
முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல்
தேர்வுக்கு இன்னும் குறைவான மாதங்களே உள்ள நிலையில், உங்களுக்கு பயன்படக் கூடிய சில ஹிண்ட்ஸ் இங்கே.
உங்களுக்கு ஒன்று தெரியுமா! தமிழக அரசே டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பல உதவிகளை செய்துவருகின்றனர்.
உதரணமாக, tamilnaducareerservices.tn.gov.in என்ற இணைய தளத்தை தயவு செய்து பாருங்கள்.
குரூப் I/II/IV என எந்த தேர்வாக இருந்தாலும். நடப்பு நிகழ்வு (current affairs) மிகவும் முக்கியமாக கருதப்படும் மாதந்திர நடப்பு நிகழ்வும் இந்த இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
மாதந்திர நடப்பு நிகழ்விடத் தாண்டி - மாதிரி தேர்வு, முந்தைய ஆண்டு வினாத் தாள், டிஎன்பிஎஸ்சி மெட்டிரியல் எல்லாம் தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையரகம் இணையதளத்தில் (tamilnaducareerservices.tn.gov.in) கிடைக்கின்றது.
இதற்கு, தேர்வர்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று தான், அந்த இனிய தளத்தில் நீங்கள் சில அடிப்படை டேட்டாக்களை கொடுத்து பதிவு செய்யவேண்டும். பதிவு செய்பவர்கள் இந்த வலைதளத்தில் உள்ள அனைத்து சௌகரிங்களையும் அனுபவிக்கலாம்.