தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வு கடந்த 3ம் தேதி நடைபெற்றது.
துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட குரூப்-1 பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு மாநிலம் முழுவதும் 856 இடங்களில் நடத்தப்பட்டது. தேர்வில், சுமார் 2,50,000க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
இன்றைய வினாத்தாளில் 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் பற்றிய கேள்வி இடம்பெற்றது.
“தலைசிறந்த படைப்பான “ பரியேறும் பெருமாள்” என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்காணும் கூற்றுகளில்/ கூற்றில் சரியானவற்றை தேர்வு செய்யவும்”
அ) இப்படம் சாதிய கட்டமைப்பின் கொடிய விளைவுகளை சுட்டிக்காட்டுகிறது.
ஆ) இப்படம் மிகச்சிறந்த படம் என்ற வரிசையில் பிலிம்பேர் விருது பெற்றது
இ) இப்படம் மாரி செல்வராஜால் இயக்கப்பட்டு, நீலம் தயாரிப்பு குழுமத்தால் வெளியிடப்பட்டது
என்று கேள்வி அமைந்தது.
இதற்கிடையே, படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், “ “பரியேறும் பெருமாள் என்கிற படைப்பின் நோக்கம் முழுமையடைந்தது ; இது மானுட சமூகத்தின் பிரதி’ ” என்று தெரிவித்தார்.
மேலும், இன்றைய தேர்வில் மற்றொரு கேள்வி, எதார்த்த நடைமுறையைத் தாண்டி ஆழமானதாக இருந்தது.
எந்த கருத்தியல் இந்திய ஒற்றுமையை அச்சுறுத்துகிறது?
1.வகுப்புவாதம்
2.பொதுவுடமை
3.மக்களாட்சி
4.சோசியலிசம்
டிஎன்பிஎஸ்சி இன்னும் சில நாட்களில் விடைக் குறிப்பை வெளியிட இருக்கிறது. இந்த கேள்விக்கான பதிலை, குரூப் 1 ஆர்வலரகளைத் தாண்டி அரசியல் பார்வையாளர்களும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.