Advertisment

TNPSC 2020: 69 பணியிடங்களுக்கு நடைபெறும் குரூப்-1 தேர்வு : முழு அறிவிப்பானை வெளியீடு

TNPSC Group 1 Notification: இந்த ஆண்டு குரூப் I தேர்வு 18 துணை ஆட்சியர், 19 காவல்துறை துணை கண்காணிப்பாளர உட்பட்ட மொத்த 69  காலி பணியிடங்களுக்கு நடைபெறும். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tnpsc notification, group

Tamil News Today Live : செயலாளர் நந்தகுமார் பேட்டி

TNPSC Exams Notification: துணை ஆட்சியர்,காவல்துறை துணை கண்காணிப்பாளர, உதவி ஆணையாளர் (வணிக வரி), துணை பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்), உதவி இயக்குநர் (கிராமப்புற வளர்ச்சி), மாவட்ட அலுவலர் (தீ மற்றும் மீட்பு சேவைகள்) போன்ற பணியிடங்களுக்கான குரூப் I தேர்வு முழு அறிவிப்பானையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

Advertisment

தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது 'தோச மாமா’கடை?

இந்த ஆண்டு குரூப் I தேர்வு 18 துணை ஆட்சியர், 19 காவல்துறை துணை கண்காணிப்பாளர உட்பட்ட மொத்த 69 காலி பணியிடங்களுக்கு நடைபெறயிருக்கிறது.

publive-image  குரூப் I முதல்நிலை தேர்வு வரும் ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி நடத்தப்படும்.  இதற்கான விண்ணப்ப செயல்முறை நேற்று (ஜன.20)முதல், அடுத்த மாதம் 19ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. முதன்மை தேர்வு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் : இந்த 5 Current Affairs-யும் படிச்சாச்சா?

வயது வரம்பு: உதவி ஆணையாளர் தவிர்த்து அனைத்து பணிகளுக்கும் தேர்வர்கள் குறைந்தது 21 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பு:   மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(முஸ்லிம்),ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர்(அருந்ததியர்கள்), பழங்குடி வகுப்பினர்  போன்ற பிரிவு தேர்வர்களுக்கு அதிகபட்ச வயது 37 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மற்ற பிரிவு தேர்வர்களுக்கு அதிக பட்ச வயது 32 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

publive-image

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு Current Affairs பாடங்களை தயார் செய்வது எப்படி?

கல்வித்தகுதி:  

மத்திய, மாநில அரசு சட்டத்தால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் வாயிலாக ஏதேனும் ஒரு பட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும்.

publive-image

மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பை  கிளிக் செய்யவும்.

 

தேர்வுமுறை:   முதல்நிலை தேர்வில் History, Culture, Heritage and Socio–Political Movements in Tamil Nadu (தமிழ் சமூகத்தின் வரலாறு)

Development Administration in Tamil Nadu (தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கான நிர்வாகம்) என்று இரண்டு பிரிவுகள்  கூடுதலாக  சேர்கப்பட்டுள்ளது.

publive-image

இதன் விளைவாக ஆப்டிடியூட் கேள்விகளின் எண்ணிக்கை குறைத்துள்ளது டிஎன்பிஎஸ்சி. ஆப்டிடியூட் புகுதிகளில் இருந்து 50 கேள்விகள் கேட்கப்பட்டு வந்திருந்த நிலையில், தற்போது 25-க சுருக்கப்பட்டுள்ளது

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment