Advertisment

TNPSC GROUP 2, 2A: தேர்வு தேதி, நேரம் அறிவிப்பு

முதல்நிலை தேர்வு இறுதித் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TN gov passed amendment to bring all appointments made in State Government institution, corporation under TNPSC

டிஎன்பிஎஸ் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் வரும் மே 21ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். 

Advertisment

குருப் 2 தேர்வு எழுத விரும்புவோர் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

பிப்ரவரி 23 முதல் மார்ச் 3ம் தேதிவரை குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

https://www.tnpsc.gov.in என்ற வலைதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

வரும் மே 21ல் குரூப் 2, குரூப் 2ஏ போட்டித்தேர்வு நடைபெறும். போட்டித் தேர்வுக்கான முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும். குரூப்-2 தேர்வு 3 கட்டமாக நடைபெற உள்ளது. குரூப் 2, குரூப் 2-ஏ தேர்வுகளை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: ரிசர்வ் வங்கி வேலை; 950 பணியிடங்கள்; டிகிரி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

200 மதிப்பெண்களில், 100 மதிப்பெண்களுக்கு தமிழ் மொழியில் இருந்து கேள்வி இடம்பெறும். 32 மையங்களில் முதன்மை தேர்வு நடைபெற உள்ளது. தேர்வை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் எழுதலாம் என்று அவர் தெரிவித்தார்.

வயது தகுதி

இந்த தேர்வில் பங்கேற்க விரும்புபவர்கள் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். இதில் எஸ்சி, எஸ்டி, அருந்ததியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லீம் பிற்படுத்தப்பட்டோர், அனைத்து சமூதாயத்தைச் சேர்ந்த மாணவர்களும் தேர்வு எழுத உச்சபட்ச வயது வரம்பு கிடையாது. ஆனால் மற்ற பிரிவினருக்கு அதிகபட்சம் 30 வயதாக நிர்ணயிக்கப்பட்டது

தேர்வு செய்யும் முறை:

முதல்நிலை தேர்வு இறுதித் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பணியிடங்கள் :

துணை வணிக வரி அதிகாரி, கிரேடு 2 நகராட்சி ஆணையர், ஜூனியர் வேலைவாய்ப்பாளர் அலுவலர், டிஎன்பிஎஸ்சி உதவி பிரிவு அலுவலர், உதவி அலுவலர் மற்றும் புரோகிராமர், கூட்டுறவு சங்கங்களின் மூத்த ஆய்வாளர், வரவேற்பாளர், தமிழகம் விருந்தினர் மாளிகை, திட்ட உதவியாளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இந்து சமய தணிக்கை பிரிவில் தணிக்கை ஆய்வாளர் மற்றும் மேற்பார்வையாளர் / மூத்த எழுத்தாளர் / தலைமை கணக்காளர் / ஜூனியர் கண்காணிப்பாளர் தமிழ்நாடு வேளாண்மை துறை உள்ளிட்ட 33 பிரிவுகள் உள்ளன

குரூப் 2-ல் நேர்காணல் இன்றி தேர்வு செய்யப்படும் பணியிடங்கள் :

கருவூலங்கள் மற்றும் கணக்குகள் துறை கணக்காளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர், தலைமை செயலகத்தில் உதவியாளர் (சட்டம் மற்றும் நிதித்துறை தவிர்த்து), இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், பொது விநியோக துறை, நேர்முக எழுத்தாளர் (சட்டம் மற்றும் நிதித் துறையைத் தவிர்த்து), நேர்முக எழுத்தாளர் (சட்டத்துறை)> நேர்முக எழுத்தாளர் (நிதித்துறை) தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் நேர்முக எழுத்தாளர், நேர்முக எழுத்தாளர், தமிழ்நாடு திட்டக்குழு, ஸ்டெனோ-டைப்பிஸ்ட்,

வருவாய் நிர்வாகம், தொழில்துறை ஆணையர் மற்றும், வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள், பதிவு, போக்குவரத்து, சிறை, போலீஸ், உணவு பொது விநியோகம் மற்றும், நுகர்வோர் பாதுகாப்பு, நில நிர்வாகம், நில சீர்திருத்தங்கள், மீன்வளம், பொதுப்பணித்துறை, தொழில்நுட்பக் கல்வி, பிற்படுத்தப்பட்டோர், தொழிலாளர், வேலைவாய்ப்பு பயிற்சி, வணிக வரிகள்,

நெடுஞ்சாலைகள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவம், காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி, வனம், H.R & C.E., சமூக பாதுகாப்பு, கால்நடை பராமரிப்பு & கால்நடை சேவைகள், விஜிலென்ஸ் & ஊழல் தடுப்பு துறை, தகவல் மற்றும் மக்கள் தொடர்பு,

தலைமைச் செயலகத் துறையில் உதவியாளர் (நிதித் துறை) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உதவியாளர், TNPSC கடைநிலைப் பிரிவு ஆசிரியர், தலைமைச் செயலகம் இளநிலை உதவியாளர், திட்டமிடல் துறை ஆகிய பணியிடங்கள் உள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment