குரூப்2 மற்றும் குரூப் 2ஏ பிரிவில் காலியாகவுள்ள 5 ஆயிரத்து 400 பணியிடங்களுக்கான குரூப்-2 தேர்வு, வரும் மே 21-ம் தேதி நடைபெற உள்ளது.
Advertisment
தமிழகத்தில் 117 மையங்களில் குரூப் 2 தேர்வு நடைபெறவுள்ளது. நடப்பாண்டில் 4.96 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், 6.81 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் என மொத்தம் 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கும். ஒரு மணி நேரம் முன்னதாகவே தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும். 8.59 மணிக்கு பிறகு வரும் தேர்வர்கள் அறையினுள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். குரூப் -2 தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிடப்படும்.
குரூப் 2 தேர்வு சிலபஸ், தயாராவது குறித்து ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன. இருப்பினும் அடிப்படையில் சில பகுதிகளை கற்றுத் தேர்ந்திருப்பது மிகவும் முக்கியம். அடிக்கடி கேள்விகள் வரக்கூடிய சில முக்கியமான தலைப்புகள் இங்கே உள்ளன.
நீங்கள் குரூப் 2 தேர்வுக்கு தயாராகிறீர்கள் என்றால், மறக்காமல் உங்கள் கடைசி நேர ரிவிஷனில் இந்த பகுதிகளை தவறாமல் படித்து விடுங்கள்!
முக்கியமான தலைப்புகள் என்ன?
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
இந்திய அரசியலமைப்பு சட்டம்
இந்திய அரசியலமைப்பு சட்டம் முன்னுரை
இந்து சமவெளி நாகரிகம்
இந்திய புவியியல்
ஒம்புட்ஸ்மன்
அடிப்படை கடமைகள்
தேர்தல் ஆணையம்
இந்திய குடியுரிமை
நிதி ஆயோக்
வகுப்புவாதம் மற்றும் தேசபிரிவினை
அடிப்படை உரிமைகள்
அப்டிடியூட்
அல்ஜிப்ரா
ரேஷியோ மற்றும் பிரபோர்ஷன்
பெரியார் சுயமரியாதை இயக்கம்
வேலூர் கலகம்
இந்திய நீதிமன்றங்கள்( உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம்)
மத்திய, மாநில அரசுகள்
பஞ்சாயத்து அமைப்புகள்
இந்திய ஆட்சி மொழிகள்
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
லோக்பால் லோக் ஆயுக்தா லோக் ஆதாலத்
இதுபோக இந்திய மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள், சீர்திருத்தவாதிகள், சுல்தான், முகலாயர்கள், குப்தர்கள், பாளையக்காரர்கள், சுதந்திர போராட்டம் உள்பட பல்வேறு முக்கிய வரலாற்று நிகழ்வுகளை படித்திருப்பது தேர்வை எளிதாக எதிர்கொள்ள உதவும்.
QUICK LEARNING 4 TNPSC, IBPS, SSC எனும் யூடியூப் சேனலில் இந்த வீடியோக்கள் அனைத்தும் காண கிடைக்கின்றன. இங்கே பார்க்கவும்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“