தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெள்ளிக்கிழமை நேர்முக தேர்வுகள் அல்லாத பதவிகளுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதில், தொல்லியல் துறையின் உதவி காப்பாட்சியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களில் சம்ஸ்கிருத மொழி அறிவு பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், புதுக்கோட்டை அரசு அருங்காட்சியத்தின் உதவி காப்பாட்சியர் பணிக்கும் சமஸ்கிருத பட்டப்படிப்பு அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் உளளிட்ட திராவிட திராவிட மொழிகள் பற்றிய அறிவு பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அதிகமாக தமிழ் மொழியின் கலாசார எச்சங்கள் கிடைக்கும் நிலையில், சமஸ்கிருத மொழி புலமை எதற்கு எனவும் கேள்வி எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“