டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே நாளை தான் கடைசி நாள் – மறந்துறாதீங்க….

TNPSC important announcement : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்கள், தங்களது கல்விச்சான்றிதழ்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் நாளைக்குள் ( டிசம்பர் 18ம் தேதி) பதிவேற்றம் செய்திட வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.

By: Updated: December 18, 2019, 12:42:42 PM

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்கள், தங்களது கல்விச்சான்றிதழ்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் நாளைக்குள் ( டிசம்பர் 18ம் தேதி) பதிவேற்றம் செய்திட வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணிக்களுக்கான டி.என்.பிஎஸ்.சி குரூப் 4 தேர்வுகள் கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் நவம்பர் 12 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

19 வருடத்திற்கு முன்பு சச்சினுக்கு சென்னை ரசிகர் கொடுத்த பேட்டிங் டிப்..

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்தக்கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். டிசம்பர் 5 முதல் 18 ஆம் தேதிக்குள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சுமார் 27 ஆயிரம் பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் 1:3 என்ற விகிதத்தில் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்விச்சான்றிதழ் அனைத்தையும் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விண்ணப்பதாரர்கள் http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக தங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம். ஏற்கனவே, நிரந்தர பதிவு எண் வழங்கப்பட்டிருக்கும். அதனை பயன்படுத்தி டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் லாகின் செய்ய வேண்டும். பின்பு கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை பின்பற்றி, சான்றிதழ்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக ஸ்கேன் செய்து, அவைகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதுவரையில், சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கு டிசம்பர் 18ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் வரையில் காத்திருக்காமல், உடனே சான்றிதழ் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Tnpsc important announcement last date of uploading certificates deadline soon

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement