குரூப்-4 முறைகேடு : 35 தேர்வர்களை விசாரிக்கும் டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தேர்வில் முறைகேடு நடந்திருக்க கூடும் என்று சந்தேகிக்கப் படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 35 தேர்வர்களை டிஎன்பிஎஸ்சி விசாரிக்க இருக்கிறது.

By: Updated: January 11, 2020, 06:07:26 PM

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4 தேர்வு கடந்த 2019 செப்டம்பர் 1ம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 5575 மையங்களில் நடந்த இந்த தேர்வை 16 லட்சத்து 865 பேர் எழுதினர். குரூப் 4, தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, சில நாட்களிலேயே, காலியிடங்களின் எண்ணிகையை  அதிகரித்தற்கான நோட்டிபிகேஷனை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.

தொடர்ந்து அந்த தர வரிசைப்பட்டியலை ஆய்வு செய்த போது, ராமநாதபுரத்தில் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 35 பேர்  குரூப் 4 தேர்வு தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களை வந்துள்ளனர்  எனக் கண்டறியப்பட்டது.


இந்த 35 பேர்களில் முக்கால்வாசி பேர் மற்றமற்ற  மாவட்டங்களை சேர்ந்தவர்கள். எதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் தேர்வு மையங்களை தேர்வு செய்ய வேண்டும்? என்ற கேள்வி தமிழ்நாட்டில் அனைவராலும் கேட்கப்பட்டு வருகிறது. மேலும், மாநில அளவில் முதலிடம் பெற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர், 4 மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய ராமேஸ்வரத்தில் உள்ள மையத்தைத் தேர்வுசெய்து ஏன் தேர்வு எழுதினார்? என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

இந்த சர்ச்சை தொடர்பான சந்தேகங்களை முடிவுக்கு கொண்டுவர டிஎன்பிஎஸ்சி தரப்பும் தற்போது முழு மூச்சில் இறங்கியுள்ளது. ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில்  தேர்வு எழுது முதல் 100 இடங்கள் வந்த 35 பேரை விசாரணைக்கு அழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணை வரும் திங்களன்று டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவகத்தில் நடைபெறவிருக்கிறது.

மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சந்தேகிக்கப்படும் குறிப்பிட்ட தேர்வு மையங்களை டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் நேரடியாக சோதனை செய்தார். தேர்வுத் தாள்கள் வைக்கப்பட்டிருந்த ராமநாதபுரம் தலைமைக் கருவூலத்தில் விசாரணை மேற்கொண்டார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Tnpsc investigates 35 students regarding group 4 exam allegation tnpsc group 4 investigation

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X