TNPSC Jobs: தமிழ்நாடு அரசு வேலை; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

TNPSC invites application for Architectural Assistant or Planning Assistant: தமிழ்நாடு அரசில் நகர திட்டமிடல் உதவியாளர் வேலை; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கட்டிடக்கலை அல்லது திட்டமிடல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு நகர மற்றும் மாநில திட்டமிடல் துணை சேவை பிரிவில் கட்டிடக்கலை உதவியாளர் அல்லது திட்டமிடல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி தேதி 23.10.2021

கட்டிடக்கலை உதவியாளர் அல்லது திட்டமிடல் உதவியாளர் (Architectural Assistant / Planning Assistant)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 04

கல்வித் தகுதி : இளங்கலை சிவில் (Civil Engineering) படிப்பில் பொறியியல் படித்திருக்க வேண்டும். அல்லது இளங்கலை கட்டிடக்கலை (Architecture) படிப்பு முடித்திருக்க வேண்டும், அல்லது நகர திட்டமிடல் (Town Planning) பிரிவில் முதுகலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.07.2021 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆனால்  SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு வயது வரம்பு இல்லை.

சம்பளம் : ரூ. 37,700 – 1,19,500

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வில் இரண்டு தாள்கள் உண்டு. முதல் தாளில் சம்பந்தப்பட்ட பிரிவில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இரண்டாம் தாளில் பொது அறிவுப் பகுதியிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 08.01.2022

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.tnpsc.gov.in அல்லது  www.tnpscexams.in  என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.10.2021

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/13_2021_Architectural_Planning_Asst_2021_english.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tnpsc invites application for architectural assistant or planning assistant

Next Story
NEET 2021 UG Results: ஆன்சர் கீ டவுன்லோட், விடைத்தாள் மதிப்பீடு முழு விவரம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X