Advertisment

TNPSC Recruitment; தமிழ்நாடு அரசு வேலை; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

TNPSC அறிவிப்பு; தமிழ்நாடு அரசு வேலை; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
TNPSC Recruitment; தமிழ்நாடு அரசு வேலை; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

TNPSC invites application for Assistant Director and Chemist: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இரண்டு விதமான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisment

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மீன்வளத்துறை, தொழில்துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

உதவி இயக்குனர் – மீன்வளம் (Assistant Director of Fisheries)

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

வயதுத் தகுதி: 01.07.2021 அன்று 33 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC  DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.F.Sc., Degree (or) A Doctorate in Zoology or Marine Biology (or) M.Sc.,(Bio-Technology) with a basic B.F.Sc.,Degree (or)  A first class degree in M.A/M.Sc., in Zoology or Marine Biology படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 56,100 – 1,77,500

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாளில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இரண்டாம் தாள் தமிழ் மொழித் தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவு வினாக்கள் அடங்கிய தாளாக இருக்கும்.

எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 12.03.2022

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கபடுவர்.

இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/20_2021_AD_FISHERIES_ENG.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

வேதியியலாளர் (Chemist in Industries and Commerce Department)

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

வயதுத் தகுதி: 01.07.2021 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC  DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in M.Sc., in Chemistry or Chemical Technology or Industrial Chemistry படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.37,700 – 1,19,500

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு உண்டு.

எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாளில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இரண்டாம் தாள் தமிழ் மொழித் தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவு வினாக்கள் அடங்கிய தாளாக இருக்கும்.

எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 19.03.2022

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கபடுவர்.

இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/21_2021_CHEMIST_ENGLISH.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC - DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பிக்கும் முறை:  விண்ணப்பிக்க விரும்புபவர்கள்  www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

உதவி இயக்குனர் மீன்வளத்த்துறை : 21.01.2022

வேதியியலாளர் : 23.01.2022

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment