தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நான்கு விதமான காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 199 பணியிடங்கள் நிரப்பட உள்ளன.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை 20.10.2021 முதல் 19.11.2021 வரை இருக்கும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Computor–cum-vaccine store keeper
மொத்த காலியிடங்கள்: 30
வயதுத் தகுதி: 01.07.2021 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Statistics அல்லது Degree in Mathematics with Statistics படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.19,500 – 62,000
Block Health Statistician
மொத்த காலியிடங்கள்: 161
வயதுத் தகுதி: 01.07.2021 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC,SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Statistics or Mathematics or Economics படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.20,600 – 65,500
Statistical Assistant
மொத்த காலியிடங்கள்: 2
வயதுத் தகுதி: 01.07.2021 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master degree in Mathematics or Statistics படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.35,900 – 1,13,500
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வில் புள்ளியியல் அல்லது கணிதம் அல்லது பொருளாதார பாடத்தில் 200 வினாக்களும், பொது அறிவில் 100 வினாக்களும் கேட்கப்படும். பொது அறிவில் 25 வினாக்கள் கணிதப்பகுதியில் இருந்து இடம்பெறும். தேர்வு இரு பகுதிகளாக மொத்தம் 5 மணி நேரம் நடைபெறும்.
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 09.01.2022
இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/16_2021_CSSE_ENG.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
Research Assistant in Evaluation and Applied Research Department
மொத்த காலியிடங்கள்: 6
வயதுத் தகுதி: 01.07.2021 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் first class post-graduate degree in Economics or Econometrics or Statistics or Business Administration or Mathematics or Social work or Sociology or Anthropology or Agricultural Economics or Public Administration படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.36,900 – 1,16,600
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு உண்டு.
எழுத்துத் தேர்வில் Economics, Econometrics, Statistics, Business Administration, Mathematics, Social work, Sociology, Anthropology, Agricultural Economics and Public Administration பாடங்களில் இருந்து 200 வினாக்களும், பொது அறிவில் 100 வினாக்களும் கேட்கப்படும். பொது அறிவில் 25 வினாக்கள் கணிதப்பகுதியில் இருந்து இடம்பெறும். தேர்வு இரு பகுதிகளாக மொத்தம் 5 மணி நேரம் நடைபெறும்.
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 22.01.2022
எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கபடுவர்.
இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/17_2021_RAEAR_ENG.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC - DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.11.2021
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.