தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது சிறை காவலர் (Jailor) பணிக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
இப்பணிக்கான விண்ணப்பம் வரும் அக்டோபர் 31க்குள் பெறப்படும். வரும் டிசம்பர் 22- ம் தேதி இப்பணிக்கான தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
காலியிடம்:
மொத்த இடம் - ஒன்று , அந்த ஒன்றும் பட்டியில் ஜாதியினருக்கு மட்டும். எஸ்சி, எஸ்சி(அருந்ததியர்) வகுப்பில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள்
சம்பளம்: ரூ .36900 - 116600 (நிலை 18) தமிழ்நாடு படி திருத்தப்பட்ட ஊதியம் விதி, 2017 கீழ்
வயது வரம்பு: வயது வரம்பு என்று எதுவும் இல்லை (அறிவிக்கப்பட்ட தேதியில் அல்லது 58 வயதை பூர்த்தி செய்திருக்கக் கூடாது )
கல்வித் தகுதி:
பல்கலைக்கழக மானிய ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எந்த பட்டம் பெற்றிருந்தாலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் .
இருந்தாலும், குற்றவியல் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகம் முடித்தோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
https://apply.tnpscexams.in என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.