TNPSC JE JDO Exam 2022 for 1083 posts apply soon, TNPSC CESSE 2023; தமிழ்நாடு அரசில் 1083 காலியிடங்கள்; டிப்ளமோ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க! | Indian Express Tamil

TNPSC CESSE 2023; தமிழ்நாடு அரசில் 1083 காலியிடங்கள்; டிப்ளமோ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

TNPSC அறிவிப்பு; தமிழ்நாடு அரசு வேலை; 1083 ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணியிடங்கள்; டிப்ளமோ இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

TNPSC CESSE 2023; தமிழ்நாடு அரசில் 1083 காலியிடங்கள்; டிப்ளமோ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு மூலம் மொத்தம் 1083 பணியிடங்கள் நிரப்பட உள்ளன.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகள் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பொறியியல் சார்ந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 04.03.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

Overseer / Junior Draughting Officer in Rural Development and Panchayat Raj Department

காலியிடங்களின் எண்ணிக்கை: 794

கல்வித் தகுதி: Diploma in Civil Engineering படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2023 அன்று 37 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC  DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.

சம்பளம் : ரூ. 35,400 – 1,30,400

Junior Draughting Officer in Highways Department

காலியிடங்களின் எண்ணிக்கை: 236

கல்வித் தகுதி: Diploma in Civil Engineering படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2023 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, பிரிவினர் 35 வயதிற்குள்ளும், MBC(V), MBC  DNC, MBC, BC and BCM பிரிவினர் 34 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 35,400 – 1,30,400

Junior Draughting Officer in Public Works Department

காலியிடங்களின் எண்ணிக்கை: 18

கல்வித் தகுதி: Diploma in Civil Engineering படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2023 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC  DNC, MBC, BC and BCM பிரிவினர் 37 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 35,400 – 1,30,400

Draughtsman, Grade – III in Town and Country Planning Department

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வித் தகுதி: Diploma in Civil Engineering படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2023 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC  DNC, MBC, BC and BCM பிரிவினர் 37 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 35,400 – 1,30,400

Foreman

காலியிடங்களின் எண்ணிக்கை: 25

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Diploma in Mechanical Engineering / B.E., Mechanical Engineering படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2022 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC  DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.

சம்பளம் : ரூ. 19,500 – 71,900

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாளில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

இரண்டாம் தாள் இரண்டு பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவு தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்ப்படும். இந்த தேர்வில் 60 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம். இல்லையென்றால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. இது தகுதித் தேர்வு மட்டுமே. இந்த மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்களில் சேர்த்துக் கொள்ளப்படாது.

இரண்டாம் பிரிவில், பொது அறிவில் 100 வினாக்களும் கேட்கப்படும். இதில் பொது அறிவில் 75 வினாக்களும், கணிதப்பகுதியில் 25 வினாக்களும் இடம்பெறும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/05_2023_CESSE_TAM.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tnpsc je jdo exam 2022 for 1083 posts apply soon