Advertisment

TNPSC exam Notification 2019 : அறிவியல் முதுகலை பட்டதாரியா நீங்கள் : ரூ.1 லட்சம் சம்பளத்தில் காத்திருக்கிறது அரசு வேலை

தடய அறிவியல் துறையில் காலியாக உள்ள ஜூனியர் சயின்டிபிக் ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tnpsc, tnpsc recruitment,assistant directot and child development project offiicer

tnpsc, tnpsc recruitment,assistant directot and child development project offiicer

TNPSC 2019 exam Notification Released:தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தடய அறிவியல் துறையில் காலியாக உள்ள ஜூனியர் சயின்டிபிக் ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம், இப்பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Advertisment

மொத்த பணியிடங்கள் : 64

பணியின் பெயர் : ஜூனியர் சயின்டிபிக் ஆபிசர்

பணியிட விபரங்கள்

வேதியியல் - 40

உயிரியல் -14

இயற்பியல் - 06

இயற்பியல் மற்றும் வேதியியல் ( கம்ப்யூட்டர் தடய அறிவியல் ) -04

முக்கிய தேதிகள்

பணியிட அறிவிப்பு வெளியான தேதி - ஜூன் 21, 2019

ஆன்லைனில் விண்ணப்பிக்க இறுதிநாள் - ஜூலை 22,2019

தேர்வு கட்டணம் செலுத்த இறுதிநாள் - ஜூலை 24, 2019

தேர்வு நாட்கள்

ஆகஸ்ட் 24, 2019 ( காலை 10 மணி முதல் மதியம் 1 வரை ) - தாள் 1 (முதுகலை படிப்பு தரம் )

ஆகஸ்ட் 24, 2019, (பிற்பகல் 2.30 மணிமுதல் மாலை 04.30 வரை ) - தாள் 2 ) (இளங்கலை படிப்பு தரம்)

கட்டணங்கள்

டிஎன்பிஎஸ்சி அறிவிக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கா ஒருமுறை நிரந்தர பதிவிற்கான கட்டணம் - ரூ.150

தேர்வுக்கட்டணம் - ரூ.150

யார் யாருக்கு தேர்வுக்கட்டணத்திலிருந்து விலக்கு மற்றும் சலுகை

Sc and ST பிரிவினர், குறைந்தபட்சமாக 40 சதவீதம் ஊனமுற்றோருக்கு தேர்வு கட்டணத்திலிருந்து முழுவிலக்கு

பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு பிரிவினருக்கு 3 முறை தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு

முன்னாள் ராணுவத்தினருக்கு 2 முறை தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு

வயது வரம்பு : ஜூலை 01, 2019 தேதியின் படி 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித் தகுதி : தடய அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும். அல்லது விண்ணப்பிக்கும் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரை

விண்ணப்பிக்கும் முறை :டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment