தேர்வன் : தமிழ்நாடு அரசு தேர்வாணையம் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பாடத்திட்டத்தில் மொழித்தாள் நீக்கியுள்ளதை நாம் அனைவரும் அறிவோம். தற்போது மாற்றப்பட்டுள்ள பாடத்திட்டத்தின்படி 175 வினாக்கள் பொது அறிவு கொண்டதாகவும், 25 வினாக்கள் திறனறி கொண்டதாகவும் கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே, பொது அறிவு தற்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. ஆகையால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் தேர்வர்களுக்கு பொது அறிவு தொடர்பான கேள்விகளையும், அதில் எவ்வாறு தயாராகுவது, எந்த கேள்விகள் முக்கியத்துவம் வாய்ந்தது ...போன்ற முக்கியாமான டிப்ஸ்களோடு அடிக்கடி உங்களை சந்திக்க இருக்கிறோம்.
இன்று, இந்த ஐந்து கேள்விகளை பழக்கப் படுத்துங்கள். இதற்கான விடைகளை நாளைத் தருகிறோம், உரிய விளக்கத்துடன்.
- விமானம் மற்றும் கடல்சார் இணைப்பு (எஃப்எம்சி) விதிகள் , 2018 எந்த அமைச்சகத்தால் வெளியடப்பட்டது (Flight and Maritime Connectivity (FMC) Rules, 2018) ?
- பாதுகாப்புத் துறை அமைச்சர்
- சிவில் விமானப் போக்குவரத்துத் துறைஅமைச்சகம்
- அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் துறை அமைச்சர்
- தொலைதொடர்புத் துறை & மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்
2. ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம் எப்போது இருந்து நடைமுறைக்கு வரப்போகிறது?
- 30 ஜூன் 2020
- 14 ஜனவரி 2020
- 31, டிசம்பர் 2019
- இவைகளில் எதுவும் இல்லை
3. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் (சேர்மன்) யார் ?
- மாண்டேக் சிங் அலுவாலியா
- சவுமித்ரா சவுத்ரி
- புலின் நாயக்
- பிபெக் டெப்ராய்
4. 15- வது நிதி ஆணையத்தின் பரிந்துரைக் காலம் என்ன ?
- 2015 - 2020
- 2020-2025
- 2019-2024
- 2021-2026
5. 'சான்-சாதன்’ ஹாகாதான் (San-Sadhan Hackathon) எதனோடு தொடர்புடையது?
- தூய்மை இந்தியா ( swachh bharat)
- ஸ்கில் இந்தியா( skill India )
- மேக் இன் இந்தியா ( Make in India)
- டிஜிட்டல் இந்தியா ( Digital India )