டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு இனிய செய்தி – தேர்வை எதிர்கொள்வது குறித்த இலவச முகாம்

TNPSC free camp : தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆவது, தேர்வில் வெற்றி பெற பாடத்திட்டங்களை எவ்வாறு வகைப்படுத்தி படிப்பது உள்ளிட்ட தேர்வு குறித்த தகவல்களை தெரிந்துகொள்ளலாம்

By: Updated: August 19, 2019, 05:56:28 PM

TNPSC Group 4 exam free motivation camp : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எழுதும் சென்னையை சேர்ந்த தேர்வர்களுக்கு, தேர்வை எதிர்கொள்வது குறித்த இலவச முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள், இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கிராம நிர்வாக அலுவலர், டைப்பிஸ்ட், பீல்டு சர்வேயர் உள்ளிட்ட 6.491 பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு, செப்டம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC free motivation camp: அரசு வழங்கும் அரிய வாய்ப்பு… செவ்வாய் மாலைக்குள் பதிவு செய்யுங்கள்

சென்னையை சேர்ந்த தேர்வர்கள், தேர்வுக்கு எவ்வாறு தயார் ஆவது, தேர்வில் வெற்றி பெற பாடத்திட்டங்களை எவ்வாறு வகைப்படுத்தி படிப்பது உள்ளிட்ட தேர்வு குறித்த தகவல்களை தெரிந்துகொள்வதற்காக, சென்னை அண்ணா இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் கோச்சிங் சென்டர் நிறுவனம், ஒருநாள் இலவச முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த இலவச முகாம், ஆகஸ்ட் 21ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த இலவச முகாமினை, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் துவக்கிவைக்க உள்ளார்.

இலவச முகாம், ஆகஸ்ட் 21ம் தேதி காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆகஸ்ட் 20ம் தேதி மாலை 5 மணிக்கு முன்னதாக www.annainstitute.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். முகாமில் கலந்துகொள்ளும் தேர்வர்களுக்கு உணவு மற்றும் இன்னபிற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

முன்பதிவு செய்தவர்கள், ஆகஸ்ட் 21ம் தேதி காலை 9 மணிக்குள் முகாம் நடைபெற உள்ள கலைவாணர் அரங்கத்தின் வருகையை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். முதலில் வரும் ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால், சென்னையில் உள்ள தேர்வர்கள் விரைந்து முன்பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Tnpsc motivation camp chennai

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X