By: WebDesk
Updated: August 13, 2020, 05:43:46 PM
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகளில் முழு வெளிப்படைத் தன்மையினை உறுதி செய்திடவும், பணி நியமனம் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்திட தேர்வாணையம் புதிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும் விதமாக தேர்வாணையம் புது இணையதளத்தை ஒன்றை உருவாக்கியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இந்த புதிய இணையத்தளத்தின் மூலம், முந்தைய ஆண்டுகளில் நடத்தி முடிக்கப்பட்ட தேர்வின் வினாத்தாள்கள் உடனடியாக தேர்வாணையத்தின் புதிய இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும், தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களின் விடைத்தாள்கள் இந்த இணையதளத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் செலுத்தி, தங்கள் விடைத்தாள்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டது.
விடைத்தாள்களைநேரடியாக அணுக வாய்ப்பு வழங்குவதன் மூலம், ஏதேனும் குளறுபடி நடந்துள்ளதா? என்பதை கண்டறிய தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு வழங்க முடியும் என்று டிஎன்பிஎஸ்சி கருதுகிறது.
தேர்வு தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தையும் கணினிமயமாக்குவதன் மூலம் முழுமையான வெளிப்டைத்தன்மை அடைய முடியும் என்று தேர்வர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தேர்வு மையங்களில் ஒளிப்பதிவு நடவடிக்கை , ஆண்டுத்திட்ட வெளியீடு, இணைய வழி விண்ணப்பமுறை, நிரந்தரப் பதிவு, ஒற்றைச் சாளர முறை போன்ற பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை டிஎன்பிஎஸ்சி முன்னதாக செயல்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook
Web Title:Tnpsc new portal tnpsc candidates answer sheet online tnpsc gov in