TNPSC Recruitment for 580 Assistant Agricultural Officer Posts: விவசாயத்துறை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. டிசம்பர் 27ம் தேதி துவங்கி ஜனவரி 27ம் தேதிக்குள் தேர்வர்கள் தங்களின் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தங்களுடைய அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் தகவலின் படி, 12ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
பின்னர் வேளாண் துறையில் டிப்ளோமா முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு வேளாண்பல்கலைக் கழகம், மற்றும் திண்டுக்கலில் அமைந்திருக்கும் காந்தி கிராம் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
மேற்கூறிய கல்வி தகுதிகளுக்கு இணையான படிப்பினை படித்திருந்தால், அதற்கான முறையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். மேற்கூறிய படிப்பிற்கு இணையான மேற்படிப்பினை படித்திருப்பவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
TNPSC Recruitment for Assistant Agricultural Officer Posts: விண்ணப்பிக்க கடைசி நாள்
இந்த தேர்வு எழுதுபவர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
உச்ச வரம்பானது பொதுப்பிரிவினருக்கு 30 வயது.
இதர வகுப்பினர்களுக்கு உச்ச வரம்பு கிடையாது.
டிசம்பர் 27ம் தேதி துவங்கி ஜனவரி 27ம் தேதிக்குள் தேர்வர்கள் தங்களின் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தேர்வு நடக்கும் நாள்
உதவியாளருக்கான தேர்வு ஏப்ரல் மாதம் 07ம் தேதி காலை மற்றும் பகல் என்று இரு நேரங்களில் நடைபெறுகிறது.
இந்த தேர்வு குறித்து இதர தகவல்களை அறிந்து கொள்ள