அரசு வேலை லட்சியமா? : கால்நடை மருத்துவத்துறையில் கொட்டிக்கிடக்குது வேலைவாய்ப்பு

TNPSC recruitment : தமிழக அரசின் கால்நடை மருத்துவத்துறையில் காலியாக உள்ள கால்நடை உதவி மருத்துவர் உள்ளிட்ட 1500க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பும் வகையிலான அறிவிப்பை, டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

By: Updated: November 20, 2019, 01:20:14 PM

தமிழக அரசின் கால்நடை மருத்துவத்துறையில் காலியாக உள்ள கால்நடை உதவி மருத்துவர் உள்ளிட்ட 1500க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பும் வகையிலான அறிவிப்பை, டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தகுதியும், திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

மொத்த பணியிடங்கள்

நேரடி பணியிடங்கள் – 1141
தற்காலிக பணியிடம் – 636

கல்வித்தகுதி

கால்நடை மருத்துவத்துறையில் பி.வி.எஸ்சி., நிறைவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

அதிகபட்ச வயது வரம்பு – 30 வயது
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை

தேர்வு முறை

எழுத்துத்தேர்வு மற்றும் வாய்வழி சோதனை ( oral test)

சம்பளம்

மாதம் ரூ.55,500 – 1,75,700

விண்ணப்பிக்கும் முறை

டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான

http://www.tnpsc.gov.in/ https://tnpscexams.in/ மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

பதிவுக்கட்டணம் – ரூ.150
விண்ணப்ப கட்டணம் – ரூ.200
எஸ்சி. எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகள் – விண்ணப்ப கட்டணம் இல்லை

முக்கிய தேதிகள்

அறிவிப்பு வெளியான தேதி : நவம்பர் 18, 2019
விண்ணப்பிக்க கடைசி தேதி : டிசம்பர் 17, 2019
விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி : டிசம்பர் 19, 2019
தேர்வு தேதி : பிப்ரவரி 23, 2020

டிஎன்பிஎஸ்சியின் தேர்வு குறித்த அறிவிப்பு

தேர்வு மையங்கள் : சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Education-jobs News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Tnpsc recruitment 2019 assistant surgeons in veterinary department

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X