TNPSC recruitment 2022 for 1089 Surveyor and Draftsman posts apply soon: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நில அளவை பதிவேடுகள் சார்நிலைப் பணிகளில் அடங்கிய நில அளவர் மற்றும் வரைவாளர் பணியிடங்கள் மற்றும் நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணிகளில் அடங்கிய அளவர்/ உதவி வரைவாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 1089 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 27.08.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு; 10-ம் வகுப்பு தேர்ச்சிக்கு 1412 பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!
நில அளவர் (Field Surveyor)
காலியிடங்களின் எண்ணிக்கை: 798
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் Diploma in Civil Engineering படிப்பு முடித்திருக்க வேண்டும். அல்லது நில அளவர் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.19,500 – 71,900
வரைவாளர் (Draftsman)
காலியிடங்களின் எண்ணிக்கை: 236
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் Diploma in Civil Engineering படிப்பு முடித்திருக்க வேண்டும். அல்லது வரைவாளர் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.19,500 – 71,900
அளவர்/உதவி வரைவாளர் (Surveyor-cum-Assistant Draughtsman)
காலியிடங்களின் எண்ணிக்கை: 55
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் Diploma in Civil Engineering படிப்பு முடித்திருக்க வேண்டும். அல்லது நில அளவர் அல்லது வரைவாளர் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.19,500 – 71,900
வயதுத் தகுதி: 01.07.2022 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாளில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் (அளவர் மற்றும் வரைவாளர்) இருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.
இரண்டாம் தாள் இரண்டு பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவு தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்ப்படும். இந்த தேர்வில் 60 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம். இல்லையென்றால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. இது தகுதித் தேர்வு மட்டுமே. இந்த மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்களில் சேர்த்துக் கொள்ளப்படாது.
இரண்டாம் பிரிவில், பொது அறிவில் 100 வினாக்களும் கேட்கப்படும். இதில் பொது அறிவில் 75 வினாக்களும், கணிதப்பகுதியில் 25 வினாக்களும் இடம்பெறும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 06.11.2022
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC - DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.08.2022
இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/FS%20&%20DM%20Tamil.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.