scorecardresearch

TNPSC வேலைவாய்ப்பு; 93 பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

TNPSC வேலை வாய்ப்பு; 93 வேளாண்மை அலுவலர், உதவி வேளாண்மை இயக்குனர், தோட்டக்கலை அலுவலர் பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

TNPSC வேலைவாய்ப்பு; 93 பணியிடங்கள்; டிகிரி படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வேளாண்மை அலுவலர், வேளாண்மை உதவி இயக்குனர், தோட்டக்கலை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான தகுதிகள் என்ன? விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்களையும் இப்போது பார்ப்போம்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வேளாண்மைப் பணிகளில் அடங்கிய வேளாண்மை அலுவலர், வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலைப் பணிகளில் அடங்கிய தோட்டக்கலை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 93 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.02.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: UPSC Exam: லீ கார்பூசியர், குடியுரிமைச் சட்டம், ஆன்லைன் கேம்களுக்கான ஜி.எஸ்.டி… முக்கிய டாபிக்ஸ் இங்கே!

வேளாண்மை அலுவலர் (Agricultural Officer)

காலியிடங்களின் எண்ணிக்கை: 37

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc Agriculture படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC, BC, BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.

சம்பளம் : ரூ. 37,700 – 1,38,500

உதவி வேளாண்மை இயக்குனர் (Assistant Director of Agriculture)

காலியிடங்களின் எண்ணிக்கை: 8

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.Sc., in Agricultural Extension or Agricultural Economics படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 34 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC, BC, BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.

சம்பளம் : ரூ. 56,100 – 2,05,700

தோட்டக்கலை அலுவலர் (Horticultural Officer)

காலியிடங்களின் எண்ணிக்கை: 48

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc., Horticulture படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC, BC, BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.

சம்பளம் : ரூ. 37,700 – 1,38,500

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். இதில் முதல் தாளில் Agriculture (or) Horticulture என சம்பந்தப்பட்ட பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

இரண்டாம் தாள் இரண்டு பகுதிளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். குறைந்தபட்சம் எடுக்க வேண்டிய மதிப்பெண்கள் 60.

இரண்டாம் தாள் பொது அறிவு. இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் : ரூ. 200, இருப்பினும் SC, SC(A), ST மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/01_2023_Agri%20and%20Horti_Tamil.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tnpsc recruitment 2023 for 93 agricultural and horticultural officers apply online