தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணிகளில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான தகுதிகள் என்ன? விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணிகளில் அடங்கிய இராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிறுவனத்தில் கால்நடை ஆராய்ச்சி உதவியாளர் (Research Assistant in the Institute of Veterinary Preventive Medicine, Ranipet) மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பில் மேலாளர் (Manager (Veterinary) in Tamil Nadu Co-operative Milk Producer’s Federation Limited) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 38 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.10.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
ஆராய்ச்சி உதவியாளர் (கால்நடை)
காலியிடங்களின் எண்ணிக்கை: 14
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.V.Sc., (Micro-biology/ Pathology/ Parasitology / Dairy Micro-biology / Animal Biotechnology) முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 56,100 – 2,05,700
மேலாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 24
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in veterinary Science (B.V.Sc & A.H) முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 55,500 – 1,75,700
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC, BC, BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். இதில் முதல் தாளில் சம்பந்தப்பட்ட பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.
இரண்டாம் தாள் இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். குறைந்தபட்சம் எடுக்க வேண்டிய மதிப்பெண்கள் 60.
இரண்டாம் பகுதி பொது அறிவு. இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுக் கட்டணம் : ரூ. 200, இருப்பினும் SC, SC(A), ST மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.
விண்ணப்பம் செய்வது எப்படி?
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.10.2023
இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/16_2023__TAM.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.