தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சாலை ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான தகுதிகள் என்ன? விண்ணப்பம் செய்வது எப்படி? மற்றும் தேர்வுக்கு தயார் ஆவது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்களையும் இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஊரக வளர்ச்சி பொறியியல் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் சாலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 761 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.02.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: TNPSC வேலைவாய்ப்பு; தகுதி உள்ளவர்கள் அப்ளை பண்ணுங்க!
சாலை ஆய்வாளர் (Road Inspector)
காலியிடங்களின் எண்ணிக்கை: 761
கல்வித் தகுதி: I.T.I. Certificate in Civil Draughtsmenship படித்திருக்க வேண்டும். Diploma in Civil Engineering படித்திருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2023 அன்று 37 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC, BC, BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.
சம்பளம் : ரூ. 19,500 – 71,900
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். இதில் முதல் தாளில் Draughtsman (Civil) என சம்பந்தப்பட்ட பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.
இரண்டாம் தாள் இரண்டு பகுதிளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். குறைந்தபட்சம் எடுக்க வேண்டிய மதிப்பெண்கள் 60.
இரண்டாம் தாள் பொது அறிவு. இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC, SC(A), ST மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.
விண்ணப்பம் செய்வது எப்படி?
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/02_2023_RI_TAM.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
தேர்வுக்கு தயாராவது எப்படி?
இந்தப் பணியிடங்களுக்கு கொள்குறி வகை எழுத்து தேர்வு நடைபெறுகிறது. மொத்தம் இரண்டு தாள்கள் நடைபெறும். முதல் தாள் ஐ.டி.ஐ (சிவில்) படிப்பில் இருந்து வினாக்கள் இடம் பெறும். இந்த தேர்வு ஐ.டி.ஐ தகுதியில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், தேர்வர்கள் தாங்கள் ஐ.டி.ஐ-யில் படித்த பாடங்களை நன்கு படித்துக் கொள்ள வேண்டும். இன்ஜினியரிங் டிராயிங், சர்வே, ஜியாமெட்ரி, லெவலிங், ரோடு இன்ஜினியரிங், ஜி.பி.எஸ் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வினாக்கள் வரும், எனவே அதற்கேற்றாற்போல் தயாராகிக் கொள்வது நல்லது.
தமிழ் மொழித் தகுதித் தாளைப் பொறுத்தவரை, 10 தகுதியில் வினாக்கள் கேட்கப்படும். எனவே 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிப் பாடப்புத்தகங்களை நன்றாக படித்துக் கொள்ள வேண்டும். மேலும் கடந்த குரூப் 4 மற்றும் கள வரைவாளர், குரூப் 3 போன்ற கேள்விகளில் கேட்கப்பட்ட வினாக்களை பகுப்பாய்வு செய்தால், கேள்விகள் எப்படி கேட்கப்படுகிறது என்ற ஐடியா கிடைக்கும்.
பொது அறிவு மற்றும் கணித வினாக்களுக்கும் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான புத்தகங்களை நன்றாக படித்துக் கொள்ள வேண்டும். மேலும் சமீபத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளின் வினாக்களை ஆராய வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு அதிகப்பட்ச தகுதி டிப்ளமோ என்பதால், கேள்விகள் நிச்சயம் 10 ஆம் வகுப்பு தரத்திலே இருக்கும். தேர்வர்கள் இதே துறையைச் சார்ந்த சமீபத்தில் நடத்தப்பட்ட கள வரைவாளர் தேர்வின் வினாத்தாளை நன்றாக கவனித்தாலே உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும். இந்த தேர்வு அதைவிட குறைவான தரத்தில் இருக்கும் என்பதால், வினாக்கள் அதைவிட எளிமையாக வரும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil