Advertisment

TNPSC; இந்த மாதம் விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய வேலை வாய்ப்புகள்

TNPSC வேலை வாய்ப்பு அறிவிப்புகள்; உதவி வனப் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNPSC Group 4 Results: குரூப் 4 தேர்வு ரிசல்ட் எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் இந்த மாதம் விண்ணப்பிக்க வேண்டிய அறிவிப்புகள் குறித்து இப்போது பார்ப்போம். மேலும், இந்த பணியிடங்களுக்கான தகுதிகள் என்ன? விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்களையும் இப்போது பார்ப்போம்.

Advertisment

இதையும் படியுங்கள்: UPSC Exam: மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பகிர்வு, சிறுசேமிப்பின் தாக்கங்கள்… முக்கிய டாபிக்ஸ் இங்கே!

உதவி வனப் பாதுகாவலர் (Assistant Conservator of Forests)

காலியிடங்களின் எண்ணிக்கை: 9

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor‘s degree in Science or Engineering படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2022 அன்று 21 வயது முதல் 34 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC, BC, BCM பிரிவினர் 39 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 56,900 – 2,09,200

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 12.01.2023

மாவட்ட கல்வி அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 11

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளாதாரம், புவியியல், வரலாறு, வணிகம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் B.T. or B.Ed முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2022 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC, BC, BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.

சம்பளம் : ரூ. 56,900 – 2,09,200

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 13.01.2023

உளவியல் உதவிப் பேராசிரியர் உடன் கலந்த மருத்துவ உளவியலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 24

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post graduate degree in Psychology; and (b) M.Phil (or) Ph.D degree in Clinical Psychology; (or) (a) Post graduate degree in Psychology; (b) a diploma in Medical Psychology or Social Psychology; and (c) a diploma in Clinical Psychology.முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2022 அன்று 37 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC, BC, BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.

சம்பளம் : ரூ. 56,100 – 2,05,700

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 20.01.2023

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC, SC(A), ST மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment