TNPSC Jobs: தமிழக அரசு மீன்வளத் துறையில் பணியிடங்கள்; குறைந்த கல்வித் தகுதி போதும்!
TNPSC has released the recruitment notification for the post of Fisheries Sub-Inspector in Tamil Nadu Fisheries Sub-Divisional Service | தமிழ்நாடு மீன்வள சார்நிலைப் பணியில் அடங்கிய மீன்துறை சார் ஆய்வாளர் பதவிக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளார்
TNPSC has released the recruitment notification for the post of Fisheries Sub-Inspector in Tamil Nadu Fisheries Sub-Divisional Service | தமிழ்நாடு மீன்வள சார்நிலைப் பணியில் அடங்கிய மீன்துறை சார் ஆய்வாளர் பதவிக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளார்
குரூப் 4 தேர்வு 2022ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது.
TNPSC Notification | TNPSC Sub Inspector Post : தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் அவ்வப்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு மீன்வள சார்நிலைப் பணியில் அடங்கிய மீன்துறை சார் ஆய்வாளர் பதவிக்கான தேர்வு அறிவிப்பை அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
Advertisment
கணினி வழியில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு வரும் விண்ணப்பிக்க நவம்பர் 11-ந் தேதி கடைசி நாள் என்றும் விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in/, www.tnpscexams.in ஆகிய இணையதளத்தின் தங்களது விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பணியிட விபரங்கள் :
பணியின் பெயர் மற்றும் குறியீடு எண்
Advertisment
Advertisements
பதவியின் பெயர்
மீன்துறை சார் ஆய்வாளர்
பதவியின் பெயர் மற்றும் குறியீடு எண்
தமிழ்நாடு மீன்வள சார்நிலைப் பணி
சம்பள விபரம்
ரூ 35,900 – ரூ 1,13,500
கணினி வழித்தேர்வு நடைபெறும்நாட்கள் மற்றும் நேரம்
தாள் – 1(200 கேள்விகள்) மீன்பிடி தொழில்நுட்பம் மற்றும் ஊடுருவல் அல்லது விலங்கியல் (பட்டயப்படிப்புதரம்)
07.02.2023 முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 11.00 மணி வரை
தாள் -2 பகுதி -அகட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு(10ம் வகுப்புத் தரம்) அல்லது பொது ஆங்கிலம் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு (கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு கோரும் நபர்கள்) பகுதி -ஆ பொது அறிவு (பட்டப்படிப்புத்தரம்)
07.02.2023 பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
குறிப்பு : தாள் II-ல் பகுதி 'அ' பிரிவில் தேர்ச்சி பெறாத தேர்வர்களின் தாள்-I மற்றும் தாள்-II-பகுதி 'ஆ' பிரிவின் வினாத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது.
வயதுத் தகுதி :
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர், அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. ஏனைய பிரிவினர் 01.07.2022 அன்று, 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண் டும்.
கல்வித்தகுதி :
தமிழ்நாடு மாநில தொழில்நுட்ப வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட மீன்வளத் தொழில்நுட்பம் மற்றும் வழிகாணும் பாடநெறியில் பட்டயப்படிப்பு பெற்றிருக்க வேண்டும் (அல்லது)விலங்கியியல் பாடங்களை முதன்மையாக கொண்ட அறிவியல் பாடநெறியால் பட்டம் பெற்றிருக்க வேண்டும் (அல்லது) மீன்வள அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். (i) Must possess a diploma in Fisheries Technology and Navigationawarded by the State Board of Technical Education and Training, Tamil Nadu.(or)(ii) Must possess a Science Degree with Zoology as main subject.(or)(iii) Must possess a Degree of Bachelor of Fisheries Science
இந்த குறிப்பிட்ட கல்வித்தகுதியினை அல்லது அதற்கு இணையான பட்டபடிப்பினை பல்கலைக்கழக மானியக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது பல்கலைக்கழகமானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திடமிருந்து பெற்றிருக்கவேண்டும்.
கட்டணம் :
பதிவுக் கட்டணம் : ரூ.150
தேர்வுக் கட்டணம் : ரூ 200
ஆதிதிராவிடர், அருந்ததியினர் பழங்குடியினர் ஆதரவற்ற விதவை மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், இஸ்லாமியர் அல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர் 3 முறை கட்டம் செலுத்த தேவையில்லை.
முன்னாள் ராணுவத்தினர் 2 முறை கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பம் சமர்பிப்பதற்கான இறுதி நாள் :
இணையவழி விண்ணப்பத்தை 11.11.2022 அன்று இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின்னர் இச்சேவை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil