எளிதான திட்டமிடல் மூலம் லட்ச ரூபாய் சம்பளத்தில் அரசுப்பணி - பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு

TNPSC recruitment : சமூகநலத்துறையில் காலியாக உள்ள துணை இயக்குனர் மற்றும் குழந்தை மேம்பாடு திட்ட அலுவலர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிகளுக்கு தகுதியுள்ள பெண் முதுகலை பட்டதாரிகள் உடனே விண்ணப்பிக்குமாறு டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

TNPSC recruitment : சமூகநலத்துறையில் காலியாக உள்ள துணை இயக்குனர் மற்றும் குழந்தை மேம்பாடு திட்ட அலுவலர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிகளுக்கு தகுதியுள்ள பெண் முதுகலை பட்டதாரிகள் உடனே விண்ணப்பிக்குமாறு டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

சமூகநலத்துறையில் காலியாக உள்ள துணை இயக்குனர் மற்றும் குழந்தை மேம்பாடு திட்ட அலுவலர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிகளுக்கு தகுதியுள்ள பெண் முதுகலை பட்டதாரிகள் உடனே விண்ணப்பிக்குமாறு டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisment

காலிப்பணியிடங்கள் – 102

துணை இயக்குனர் – 13 பணியிடங்கள்

சம்பளம் – ரூ. 56100-1,77,500

Advertisment
Advertisements

கல்வித்தகுதி – ஹோம் சயின்ஸ், சைக்காலஜி, சோசியாலஜி, உணவு , ஊட்டச்சத்து உள்ளிட்ட துறைகளில் முதுகலை படிப்பில் தேர்ச்சி

வயது வரம்பு : எஸ்.சி. எஸ்.டி. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட – வயது வரம்பு இல்லை

அனைத்து பிரிவுகளிலும் உள்ள விதவைகள் மற்றும் இதர வகுப்பினர் – அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

குழந்தைகள் மேம்பாடு திட்ட அலுவலர் – 87 பணியிடங்கள்

சம்பளம் – ரூ. 36900-1,16, 600

கல்வித்தகுதி : ஹோம் சயின்ஸ் அல்லது நியூட்ரிசன் பிரிவில் பட்டப்படிப்பில் தேர்ச்சி

வயது வரம்பு ; எஸ்.சி. எஸ்.டி. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு, அனைத்து பிரிவுகளிலும் உள்ள விதவைகள் – வயது வரம்பு இல்லை

இதர வகுப்பினர் – அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு தேதி

தேர்வு நாட்கள் – நவம்பர் 16 மற்றும் 17, 2019

தேர்வு முறை :

துணை இயக்குநர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர் பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, வாய்மொழித்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம், தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

எழுத்துத்தேர்வு : இரண்டு தாள்களாக நடத்தப்பட உள்ளன.

துணை இயக்குனர் பணியிடம் ( முதுநிலை படிப்பு தரம்)

துணை இயக்குனர் பணியிடங்களுக்கான முதல் தாள் 200 மதிப்பெண்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த முதல்தாளில், ஹோம் சயின்ஸ், சைக்காலஜி, சோஷியாலஜி, குழந்தைகள் வளர்ப்பு மற்றும் மேம்படு, புட் அண்ட் நியூட்ரிசன், சோசியல் வொர்க் மற்றும் ரிஹாபிலிடேசன் சயின்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் இருந்து கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.

1 கேள்விக்கு 1.5 மதிப்பெண்கள் என்ற வீதத்தில், 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் மேம்பாடு திட்ட அலுவலர் ( இளங்கலை படிப்பு தரம்)

நியூட்ரிசன் அண்ட் டயட்டிக்ஸ், ஹோம் சயின்ஸ் பாடங்களிலிருந்து 200 கேள்விகள் கேட்கப்படும்.

ஒரு வினாவுக்கு 1.5 மதிப்பெண்கள் என்பதனடிப்படையில் 300 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.

இரண்டாம் தாள் - பொதுத்தாள். இந்த தாள் இரண்டு பணியிடங்களுக்கும் பொதுவானது.

இளங்கலை படிப்பு தரத்தில் 100 கேள்விகள் கேட்கப்படும்.

10ம் வகுப்பு கல்வித்தரத்தில் 100 கேள்விகள் என 200 கேள்விகள் கேட்கப்படும். 200 மதிப்பெண்கள்

நேர்காணல் - 70 மதிப்பெண்கள்

தேவையான மதிப்பெண்கள்

மொத்த மதிப்பெண்கள் - 570

எஸ்.சி., எஸ்.டி. எம்பிசி, பிசி(எம்), பிசி உள்ளிட்ட பிரிவினர் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணாக 171 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மற்ற வகுப்பினர் - 228 மதிப்பெண்கள் குறைந்தபட்ச தேர்ச்சியாக நிர்ணயிக்கப்பப்டுள்ளது.

முதுகலை படிப்பு தரத்திலான முதல் தாளில் வினாக்கள் ஆங்கில மொழியில் மட்டும் இடம்பெற்றிருக்கும்.

இளங்கலை படிப்பு தரத்திலான முதல் தாளகில் வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் இடம்பெற்றிருக்கும்.

இரண்டு பணியிடங்களுக்கும் பொதுவான இரண்டாம் தாளில் வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளிலும் இடம்பெற்றிருக்கும்.

Tnpsc

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: