சமூகநலத்துறையில் துணை இயக்குனர் பணி : பெண் பட்டதாரிகளே அரிய வாய்ப்பு – மிஸ் பண்ணிறாதீங்க…

TNPSC recruitment : சமூகநலத்துறையில் காலியாக உள்ள துணை இயக்குனர் மற்றும் குழந்தை மேம்பாடு திட்ட அலுவலர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

tnpsc, women candidates, child development, social welfare depratment, assistant director
tnpsc, women candidates, child development, social welfare depratment, assistant director, டிஎன்பிஎஸ்சி, பெண் பட்டதாரிகள், குழந்தை மேம்பாடு, சமூகநலத்துறை, துணை இயக்குனர்

சமூகநலத்துறையில் காலியாக உள்ள துணை இயக்குனர் மற்றும் குழந்தை மேம்பாடு திட்ட அலுவலர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பதவிகளுக்கு தகுதியுள்ள பெண் முதுகலை பட்டதாரிகள் உடனே விண்ணப்பிக்குமாறு டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

காலிப்பணியிடங்கள் – 102

துணை இயக்குனர் – 13 பணியிடங்கள்

சம்பளம் – ரூ. 56100-1,77,500

கல்வித்தகுதி – ஹோம் சயின்ஸ், சைக்காலஜி, சோசியாலஜி, உணவு , ஊட்டச்சத்து உள்ளிட்ட துறைகளில் முதுகலை படிப்பில் தேர்ச்சி

வயது வரம்பு : எஸ்.சி. எஸ்.டி. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட – வயது வரம்பு இல்லை
வகுப்பு, அனைத்து பிரிவுகளிலும் உள்ள விதவைகள், இதர வகுப்பினர் – அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

குழந்தைகள் மேம்பாடு திட்ட அலுவலர் – 87 பணியிடங்கள்

சம்பளம் – ரூ. 36900-1,16, 600

கல்வித்தகுதி : ஹோம் சயின்ஸ் அல்லது நியூட்ரிசன் பிரிவில் பட்டப்படிப்பில் தேர்ச்சி

வயது வரம்பு ; எஸ்.சி. எஸ்.டி. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு, அனைத்து பிரிவுகளிலும் உள்ள விதவைகள் – வயது வரம்பு இல்லை
இதர வகுப்பினர் – அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பதிவுக்கட்டணம் – ரூ.150
தேர்வுக்கட்டணம் – ரூ .200

முக்கிய தேதிகள்

பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியான நாள் – ஆகஸ்ட் 13, 2019
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி – செப்டம்பர் 11, 2019
கட்டணம் செலுத்த கடைசி தேதி – செப்டம்பர் 13, 2019
தேர்வு நாட்கள் – நவம்பர் 16 மற்றும் 17
இந்த பணியிடங்களுக்கு ஹோம் சயின்ஸ் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதால், டிஎன்பிஎஸ்சி சார்பில் 2011ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் ஹோம் சயின்ஸ் குறித்த வினாத்தாள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மனையியல் பாட வினாத்தாள்

தேர்வர்கள், தேர்வுக்கு உரிய பாடத்திட்டங்களை கவனமுடன் படித்து தேர்வில் வெற்றி பெற இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையதளம் உங்களை அன்புடன் வாழ்த்துகிறது.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tnpsc recruitment women graduates social development

Next Story
மாணவர்கள் வாசிக்க, எழுத- டெக்னாலஜியை அறிமுகப்படுத்தும் சிபிஎஸ்இCBSE Revised Syllabus
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com