Advertisment

டிஎன்பிஎஸ்சி 991 பணியிடங்கள்: பட்டதாரிகள், டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

TNPSC horticulture and agricultural officer Recuritment : தேர்வுக்கான வயது வரம்பு 30 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வயது வரம்பு இடஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தளர்த்தப்படும்

author-image
WebDesk
New Update
டிஎன்பிஎஸ்சி 991 பணியிடங்கள்: பட்டதாரிகள், டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

TNPSC Recuritment For Horticulture and agricultural officer 2021:  உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள்,   தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ளது.

Advertisment

விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களது விண்ணப்பங்களை இணையதளம் மூலம் tnpsc.gov.in  என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 4. 

உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலருக்கான தேர்வு ஏப்ரல் 17 ம் தேதியும், மீதமுள்ள பதவிக்கான தேர்வு ஏப்ரல் 18 ம் தேதியும் நடைபெறும்.

இந்த ஆட்சேர்ப்பு மூலம் மொத்தம் 991 காலி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

எழுத்து தேர்வை அடிப்படையாக கொண்டு நேர்காணல் தேர்வுக்காக மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இரண்டு தேர்வில் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

காலி பணியிடங்கள் விவரம்: 

தோட்டக்கலை உதவி இயக்குனர்கள்  பணி - 28

தோட்டக்கலை அதிகாரிகள்  பணி - 169

வேளாண் அதிகாரி (Extension) பணி  - 365

உதவி வேளாண்மை அலுவலர்கள் பணி  - 122

உதவி தோட்டக்கலை அதிகாரிகள் பணி   - 307

TNPSC 2021: விண்ணப்பிப்பது எப்படி

ஸ்டேப் 1 – அதிகாரப்பூர்வ அண்ணா பல்கலைக்கழக வலைத்தளத்திற்கு (apply.tnpscexams.in) செல்லுக

ஸ்டேப் 2 – திரையின் மேலே “விண்ணப்பிக்க ” என்ற இணைப்பைக் கிளிக் செய்க.

ஸ்டேப் 3 – நிரந்தப்பதிவு விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துக

ஸ்டேப் 4 – ஸ்கேன் செய்யப்பட்ட சான்றிதழ்களை பதிவேற்றம் செய்க

ஸ்டேப் 5 – தேர்வுக்கான விவரங்களை நிரப்பி “சப்மிட்” என்பதைக் கிளிக் செய்க.

ஸ்டேப் 6 – விண்ணப்ப படிவத்தின் நகலைப் பதிவிறக்கம் செய்க.

TNPSC recruitment 2021: Apply for 991 posts, salary up to Rs 1.77 lakh

 

தேர்வுக்கான வயது வரம்பு 30 வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வயது வரம்பு இடஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தளர்த்தப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட தேர்வர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

TNPSC Assistant Director of Horticulture and Horticultural Officer Recuritment 

கல்வி: உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு குறைந்தது இரண்டு வருட பட்டயப் படிப்பை முடித்திருக்க வேண்டும். வேளாண் அலுவலர்கள் பதவிக்கு, இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் பதவிக்கு முதுகலை பட்டம் அடிப்படைத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment