தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளை இன்று வெளியிடுவதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவித்தது. அப்போது 761 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது 957 இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ தகுதியாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கான தேர்வு கடந்த ஆண்டு மே மாதம் நடத்தப்பட்டது.
இந்தநிலையில், நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட காரணங்களால் தாமதமாகி வந்த நிலையில், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தேர்வு முடிவுகளை வெளியிடுவதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாலை ஆய்வாளர் (தமிழகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில்) தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. பதவிக்கு ஐடிஐ முடித்திருக்க வேண்டும். மொத்த காலியிடங்கள்: 957” என்று பதிவிட்டுள்ளார்.
எனவே சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வை எழுதியவர்கள் தேர்வு முடிவுகளை எப்படி தெரிந்துக் கொள்வது என்பது இங்கே.
படி 1: முதல் https://www.tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
படி 2: முகப்பு பக்கத்தில் சமீபத்திய தேர்வு முடிவுகள் (Latest Results) என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
படி 3: இப்போது காண்பிக்கப்படும் பக்கத்தில் சாலை ஆய்வாளர் தேர்வு முடிவுகள் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
படி 4: இப்போது உங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி கொண்டு உள்நுழைய வேண்டும்.
படி 5: திரையில் உங்கள் தேர்வு முடிவுகள் காண்பிக்கப்படும். எதிர்கால குறிப்புக்காக சேமித்து வைத்துக் கொள்ளவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“